தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘மாமூல்’ கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் வணிகர் பேரமைப்பு மாநாடு வலியுறுத்தல்

8 May 2026, 12:27 am
‘மாமூல்’ கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் வணிகர் பேரமைப்பு மாநாடு வலியுறுத்தல்

‘மாமூல்’ கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் வணிகர் பேரமைப்பு மாநாடு வலியுறுத்தல்

சென்னை, மே 7- காவல்துறை அத்துமீறல்கள் மற்றும் சமூக விரோதிகளின் ‘மாமூல்’ கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலி யுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 43ஆவது வணிகர் தின மாநாடு “வணிகர் விழிப்புணர்வு எழுச்சி” மாநாடாக திருவாரூரில் மாநில த்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது.

மாநிலப் பொதுச்செயலாளர் வெ.கோவிந்த ராஜுலு வரவேற்றார். மாநாட்டு தீர் மானங்களை மாநில தலைமைச் செய லாளர் பேராசிரியர் ஆர்.ராஜ்குமார் முன்மொழிந்தார். மாநிலப் பொருளா ளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தார்.

திரைப்பட நடிகரும், தொழிலதி பருமான லெஜண்ட் சரவணன், முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, தங்கம்-வைரம் வியா பாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்தி லால் செலானி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

தீர்மானங்கள் தனிநபர் கடன் அதிகரிப்பை தவிர்க் கவும், உற்பத்தி சார்ந்த பொருளாதா ரத்தை கட்டமைக்கவும் அரசுகள் இலவசங்களை முழுமையாக தவிர்க்க வேண்டும், பிளாஸ்டிக்குக்கு மாற்று பொருட்கள் உருவாகும் வரை சட்டங் களை வரைமுறைப்படுத்த வேண்டும், இலவசக் குடிநீர்: குடிநீருக்கான வரியை நீக்கி, பாதுகாக்கப்பட்ட குடிநீர்விலையில் லாமல் வழங்க வேண்டும்.

ஊழல் வழக்குகளுக்கான தண்டனையை கடுமையாக்குவதோடு, மாவட்ட ஊழல் ஒழிப்பு பிரிவில் வணி கர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து சிறு வணிகர்களை காக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்.

ரிய மின் தகடுகள் அமைக்க மாநில அரசு மானியம் வழங்க வேண்டும்; வணிக உரிமங்களை ஆயுள் உரிமமாக மாற்ற வேண்டும், உணவுப் பாதுகாப்பு மற்றும் ஜி.எஸ்.டி சட்டங்களில் அறி யாமையால் தவறு செய்யும் வணிகர் களை குற்றவாளிகளாகக் கருதும் முறையை நீக்க வேண்டும்.

பட்டாசு உரிமங்களை விரைந்து வழங்க வேண்டும், ஆங்கிலேயர் கால அடிமைச் சட்டங்களை நீக்கி, வணி கர்களுக்கு எதிரான குற்ற சட்ட நட வடிக்கைகளை களைய வேண்டும்.

நிலத்தடி நீரை பெருக்க ஆறுகளில் விரைந்து தடுப்பணைகள் கட்ட வேண்டும். அத்தியாவசிய எரிவாயு விநி யோகத்தைச் சீரமைக்கவும் நட வடிக்கை எடுக்க வேண்டும். டெல்டா மாவட்ட விவசாயம் காக்க தரமான தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்க வேண்டும்.

காவல்துறை அத்துமீறல் கள் மற்றும் சமூக விரோதிகளின் ‘மாமூல்’ கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும், திருவாரூர் மாவட்ட நலன் கருதி புதிய விரைவு ரயில்களை இயக்க வேண்டும், மூடப்பட்ட பார்சல் அலுவலகத்தை திறக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

மே 5ஆம் தேதியை வணிகர் தினம் என அங்கீகரித்த முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.