தீக்கதிர் முக்கிய செய்திகள்
28 Oct 2026, 10:04 pm

நெடுஞ்சாலைத் துறையில் ரூ. 2,000 கோடி ஊழல்?விரைவில் வெள்ளை அறிக்கை

சென்னை: தமிழக நெடுஞ்சாலைத் துறையில் ரூ. 2,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், இதுதொடர்பாக விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் ஆண்டில் மட்டும் ரூ. 2,000 கோடிக்கு ஒட்டுப்பணிகள் (பேட்ச் வொர்க்) மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், ரூ. 10 லட்சத்துக்கு மேற்பட்ட மதிப்பிலானபணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட வேண்டிய நிலையில், திட்ட மதிப்பீட்டை ரூ. 10 லட்சத்துக்குள் காட்டி,உண்மையான ஒப்பந்ததாரர்கள் இல்லாமல் போலியான நபர்களைப் பயன்படுத்தி முறைகேடுகள்செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற முறைகேடுகள் அனைத்துத் துறைகளிலும் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முகாம் அலுவலகம்; முதல்வர் ஆய்வு!

சென்னை: நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து தலைமைச் செயலகத்துக்கு முதல்வர் தினமும் சுமார் 19 கி.மீ. பயணம் செய்து வருகிறார். இதனால்,காலை மற்றும் மாலை நேரங்களில் அவர் செல்லும் வழித்தடங்களில் காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றனர்.இந்தச் சிக்கலைக் குறைக்கும் நோக்கில், டிஜிஎஸ் தினகரன் சாலையில் காலியாக இருந்த வீடு முகாம் அலுவலகமாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த புனரமைப்புப் பணிகளை முதல்வர் விஜய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதிக விலைக்கு மின்சாரம்வாங்கப்போவதில்லை! அமைச்சர் நிர்மல் குமார்

சென்னை: டிசம்பர் முதல் 2027 மே மாதம் வரை 2,100 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ. 41.50 என்ற விலையில் வாங்க மின்வாரியம் முடிவு செய்துள்ளதாகவும், டிசம்பர் மாதத்தில் மட்டும் 361 மெகாவாட் மின்சாரம் வாங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதற்குப் பதிலளித்திருக்கும் அமைச்சர், ஒப்பந்தப்புள்ளியில் பல நிறுவனங்கள் மிக அதிக விலையைக் குறிப்பிட்டுள்ளதாகவும், அந்த விலைகள் நியாயமற்றவை, என்றும்; அதிக விலையுள்ள எரிவாயு மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இனி வாங்கப்படாது என்றும் தெரிவித்தார். தொடர்புடைய ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்ய ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேனி சிறையிலிருந்து தப்பிய அனைவரும் பிடிபட்டனர்!

தேனி: தேனி மாவட்டச் சிறையிலிருந்து, திங்கட்கிழமையன்று இரவு காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற 17 கைதிகளில், 13 பேர் பிடிபட்டிருந்த நிலையில், எஞ்சிய மேலும் 4 பேரும் புதன்கிழமையன்று பிடிபட்டனர்.

முதற்கட்டமாக, பிரவீன்குமார், சிலம்பரசன், ராஜாசிக்கந்தர், ராஜ்குமார் மற்றும் மாற்றுத் திறனாளி சிறைவாசியான பிரசாந்த் (எ) லிங்கபிரசாத் ஆகிய 5 பேர்செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்ட நிலையில், டிரோன் கேமரா தேடுதலின் மூலம் வனப்பகுதியில் பதுங்கியிருந்த கருப்பசாமி, தருண்குமார், பாண்டிச்செல்வம், சபரிநாதன், நிஷாந்த், முத்து இளங்கோவன், கார்த்திக்ராஜா, சோலை முகிலேஸ்வரன் ஆகியோரும் அன்றைய தினமே சிக்கினர்.

மலைப்பகுதியில் பதுங்கியிருந்த பொன்முத்து, ரெஜின் ஆகிய இருவரைத் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.இதன்மூலம் பிடிபட்டவர்களின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்தது.

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த சகோதரர்களான திருப்பதி மற்றும் மீனாட்சிசுந்தரம் ஆகிய இருவரும் புதன்கிழமை கூடலூர் வடக்கு காவல் நிலையத்திற்குச் சரணடைய வருவதாகக் கிடைத்த தகவலின் பேரில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் உத்தமபாளையம் டி.எஸ்.பி. சந்திரசேகரன், ஆய்வாளர் பார்த்திபன் உள்ளிட்ட காவல் குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டு, வரும் வழியிலேயே அவர்கள் இருவரையும் கைது செய்து க.விலக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.இதன் மூலம் தப்பியோடிய 17 சிறைவாசிகளும் முழுமையாகப் பிடிபட்டுள்ளனர்.