டயர் ரீட்ரேடிங் தொழிலுக்கு மின்கட்டண சலுகை வழங்கிடுக
8 Aug 2026, 12:08 am

டயர் ரீட்ரேடிங் தொழிலுக்கு மின்கட்டண சலுகை வழங்கிடுக

நாமக்கல், ஆக.7-டயர் ரீட்ரேடிங் தொழிலுக்கு மின்கட்டண சலுகை வழங்க நாமக்கல்லில் தமிழ்நாடு டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்க வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், நாமக்கல் – சேலம் சாலையில் உள்ள குமரன் ஹோட்டலில் வியாழனன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் டயர் ரீட்ரேடிங் தொழில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும், மூலப்பொருட்களின் விலை உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு, பராமரிப்புச் செலவுகள் அதிகரித்திருப்பது உள்ளிட்ட காரணங்களால் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர்.

இதையடுத்து, நலிவடைந்து வரும் டயர் ரீட்ரேடிங் தொழிலை பாதுகாக்கும் வகையில் தொழிற்சாலைகளுக்கு மின்சாரக் கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், டயர் ரீட்ரேடிங் தொழிலை மோட்டார் போக்குவரத்து தொழிலின் ஒரு பகுதியாக அங்கீகரித்து, அத்துறைக்கென தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்றும், அதன் மூலம் தொழிலாளர்கள் மற்றும் தொழில் உரிமையாளர்களுக்கு அரசு நலத்திட்டங்கள், காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் டயர் ரீட்ரேடிங் தொழில் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.