தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜவுளி துறையில் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றுவோம்

26 Jun 2026, 1:32 am
ஜவுளி துறையில் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றுவோம்
<p><strong>ஜவுளி துறையில் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றுவோம்</strong></p><p>கோவை, ஜூன் 25- கோவை அவிநாசி சாலை லீ மெரிடி யன் ஹோட்டலில், தொழில் நுட்ப ஜவுளித்துறை தொடர்பான விழிப்பு ணர்வு கூட்டம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்வு வியாழனன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கைத்தறி, துணி நூல் மற் றும் கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி சிறப்பு விருந்தினராகப் பங் கேற்றார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் பவன் குமார். சிங்காநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் ஸ்ரீகிரி பிரசாத் மற்றும் ஜவுளித்துறை சார்ந்த முக்கிய பிரமுகர் கள் பங்கேற்றனர். விழாவில் ரூ.123 கோடி மதிப்பிலான 5 நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத் தாகின. நிகழ்ச்சியில் பேசிய ஜவுளித்துறை செயலாளர் வெங்கடேசன் ஐ.ஏ.எஸ், “இந்தியாவின் ஒட்டு மொத்த ஜவுளி ஏற்றுமதியில் 60 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்துதான் மேற்கொள்ளப்படுகிறது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு உள் ளிட்ட மேற்கு மண்டலத்தின் பங்கு மிக முக்கியமானது. இனி நமது இலக்கு களை வெறும் ஜவுளி மேம்பாடு என்று சுருக்கிக் கொள்ளாமல், ‘தமிழ்நாடு டெக்ஸ்டைல் மிஷன்’ என்ற பெயரில் பல உள்-இயக்கங்கள் மூலம் செயல் படுத்தி உற்பத்தியை 1.5 மடங்கு உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். உலகளாவிய தேவையை ஒட்டி ‘செயற்கை இழை’ உற்பத்தியை நோக்கி நகர உள்ளோம். மேலும், விளை யாட்டுத் துறைக்கான ‘ஸ்போர்டெக் சிறப்பு மையம்’ மேம்படுத்தப்பட்டு வரு கிறது” என்றார். தொடர்ந்து சிறப்புரையாற்றிய அமைச்சர் விஜய் பாலாஜி, “புதிய அர சாங்கம் பொறுப்பேற்ற பின், முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு அதிக முத லீட்டாளர்கள் வந்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மண்ட லத்தை சேர்ந்தவருக்கு முதல மைச்சர் இத்துறையின் பொறுப்பை வழங்கியுள்ளார். பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்குச் செல்லும் சர்வ தேச ஜவுளி ஆர்டர்களை மீண்டும் தமி ழகத்திற்கு மீட்டுக் கொண்டு வர அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக் கும். கருவறையில் இருந்து கல்லறை வரை ஜவுளித்துறை நீடித்திருந்தாலும், தொழில்நுட்ப ஜவுளி குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லை. தமி ழர்களால் முடியாதது வேறு எவராலும் முடியாது. ஒருங்கிணைந்த வளர்ச் சியை நோக்கமாகக் கொண்டு ‘வெற்றிக்கழகம் விஷின் 2026’ செயல் படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் இத்துறையை உலகத்த ரம் வாய்ந்ததாக மாற்றுவோம். அதே போல், பொங்கலுக்கு வேஷ்டி, சேலை வழங்குவதிலும் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது” என்று பேசினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.