தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

35 ஆவது தேசிய சப்-ஜூனியர் பெண்கள் கபடி போட்டி வெள்ளிப்பதக்கம் வென்றது தமிழ்நாடு அணி

3 Dec 2025, 2:59 pm
35 ஆவது தேசிய சப்-ஜூனியர் பெண்கள் கபடி  போட்டி வெள்ளிப்பதக்கம் வென்றது தமிழ்நாடு அணி
<p><strong>35 ஆவது தேசிய சப்-ஜூனியர் பெண்கள் கபடி &nbsp;போட்டி வெள்ளிப்பதக்கம் வென்றது தமிழ்நாடு அணி</strong></p> <p>மதுரை,டிச.3- 35 ஆவது தேசிய சப்-ஜூனியர் பெண்கள் கபடி போட்டி யில் தமிழ்நாடு அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. &nbsp; 35 ஆவது தேசிய சப்-ஜூனியர் பெண்கள் கபடி போட்டி நவம்பர் மாதம் 27 -30 ஆம் தேதி வரை ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள ராயட் பஹ்ரா இன்ஸ்ட்டியூட்டில் நடைபெற்றது. &nbsp;இதில் கேப்டன் காவியா தலைமையில் 14 பேர் கொண்ட தமிழ்நாடு அணி பங்கேற்று விளையாடியது. அணியின் பயிற்சியாளராக கண்ணகி நகர் அணியின் பயிற்சியாளர் ராஜி, மேலாளராக தமிழ் ஆகியோர் வழிநடத்தினர். &nbsp; இதில் லீக் ஆட்டங்களில் தமிழ்நாடு அணி 51-13 புள்ளிகளில் &nbsp;மேற்கு வங்கத்தையும் 32-12 புள்ளி களில் &nbsp; உத்தரகண்ட் அணியையும் &nbsp; &nbsp;38-34 புள்ளிகள் வித்தியாசத்தில் பீகாரையும் வென்றது. காலிறுதி ஆட்டத்தில் 44-31 புள்ளிகளில் இமாச்சலப்பிரதேச அணியையும் அரையிறுதி ஆட்டத்தில் 41-39 புள்ளிகளில் ராஜஸ்தான் அணியையும் வென்றது. இறுதி ஆட்டத்தில் ஹரியானாவுடன் விளையாடி,இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இப்போட்டியில் ஹரியானா அணி தங்கப்பதக்கத்தையும் தமிழ்நாடு அணி வெள்ளிப்பதக்கத்தையும் வென்றன. ராஜஸ்தான், மகாராஷ்டிரா அணிகள் வெண்கலப்பதக்கங்களை வென்றன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.