முந்தய பக்கம்

15 ஆவது மினி தேசிய ரோல் பால் போட்டியில் தமிழக அணி சாம்பியன்ஷிப்

23 Feb 2026, 5:35 pm
15 ஆவது மினி தேசிய  ரோல் பால் போட்டியில்  தமிழக அணி சாம்பியன்ஷிப்
<p><strong>15 ஆவது மினி தேசிய &nbsp;ரோல் பால் போட்டியில் &nbsp;தமிழக அணி சாம்பியன்ஷிப்</strong></p> <p>திருச்சிராப்பள்ளி, பிப்.23- &nbsp;15 ஆவது மினி தேசிய ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டி, கடந்த பிப்.21 ஆம் தேதி துவங்கி 3 நாட்கள் திருச்சி கே.கே. நகரில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா உள்பட 20 மாநிலங்களைச் சேர்ந்த 11 வயதிற்குட்பட்ட ஆண்கள், பெண்கள் அணிகள் விளையாடின. போட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற்றது. &nbsp;திங்களன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், பெண்கள் பிரிவில் தமிழ்நாடு, ஒடிசாவை 2 - 1 என்ற கோல் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றது. ஆண்கள் பிரிவில் அசாம் - தமிழ்நாடு அணியை 7 - 6 என்ற கோல் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றது. திருச்சி வேலம்மாள் போதி கேம்பஸில் நடந்த பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு காவல்துறை மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன், இந்திய ரோல்பால் சம்மேளன செயலாளர் பிரதாப் பகர், தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் எம்.பி. சுப்ரமணியம், தமிழ்நாடு ரோல் பால் சங்க பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினர். தமிழ்நாடு ரோல் பால் சங்க துணைத் தலைவர்கள் சரவணன், பிரேம்நாத், பொருளாளர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram