35 ஆவது தேசிய சப்-ஜூனியர் பெண்கள் கபடி போட்டிக்கான தமிழக அணி அறிவிப்பு
20 Nov 2025, 3:46 pm
<p><strong>35 ஆவது தேசிய சப்-ஜூனியர் பெண்கள் கபடி போட்டிக்கான தமிழக அணி அறிவிப்பு</strong></p>
<p>மதுரை, நவ.20 - 35 ஆவது தேசிய சப்-ஜூனியர் பெண்கள் கபடி போட்டி நவம்பர் மாதம் 27 -30 ஆம் தேதி வரை ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள ராயட் பஹ்ரா இன்ஸ்ட்டியூட்டில் நடைபெற உள்ளது . இதில் கலந்து கொள்ளும் 14 பேர் கொண்ட தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 6 முறை தேசிய போட்டியில் கலந்து கொண்டு 4 பதக்கங்களை வென்ற சென்னை கண்ணகி நகர் அணியின் காவியா அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் . அணிக்கு தேர்வான வீராங்கனைகள்: ஆர்.காவியா, கே.யமுனா, எம்.லிகிஷா, எஸ்.பிருந்தா, எஸ்.கௌதமி, ஏ.ஸ்ரீநிதி, எஸ்.சஞ்சீவினி,கே.கனிஷ்கா, பி.தேவஸ்ரீ, எம்.சனுஷா, வி.அனுப்ரியா, எம்.ஸ்ரீதர்ஷினி, எஸ்.சையானா சூபியா, டி.ஷோபியா ஆகியோர் ஆவர். அணியின் பயிற்சியாளராக கண்ணகி நகர் அணியின் பயிற்சியாளர் ராஜி, மேலாளராக தமிழ் ஆகியோர் வழிநடத்துகின்றனர். பீகாரில் நடைபெற்ற 33 ஆவது தேசிய சப் ஜூனியர் போட்டியில் பீகார் நடுவர்களின் ஒருதலைப்பட்சமான செயல்பாட்டால் கால் இறுதியில் தமிழ்நாடு அணி வெளியேற்றப்பட்டது. கடந்த முறை வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாடு அணி இந்த முறை தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்று கபடி ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். </p>
