புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சையை உறுதி செய்திடுக! விதிமீறும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
24 May 2026, 11:02 pm

புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சையை உறுதி செய்திடுக! விதிமீறும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

மதுரை, மே 24- புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு முழுமையான கட்டண மில்லா சிகிச்சையை உறுதி செய்யவும், அர சாணைகளுக்கு புறம்பாக செயல்படும் மருத்துவமனைகள் மீது தமிழக அரசு உட னடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டச் செயலாளர் பெ.சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம்-2021 கடந்த 30.6.2025 அன்று முடிவடைந்த நிலை யில், 1.7.2025 முதல் 30.6.2026 வரை ஓராண்டுக்கு திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர் அமைப்புகளின் கருத்துக் களை கேட்காமல், முந்தைய அரசாணை யிலேயே எந்த மாற்றமும் செய்யாமல் தமி ழக அரசு திட்டத்தை நீட்டித்திருப்பது ஏமாற்ற மளிப்பதாக உள்ளது.

கண்புரை சிகிச்சைக்கு ஒரு கண்ணிற்கு அதிகபட்சமாக ரூ.30 ஆயிரமும், கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அரசாணையில் தெளி வாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், மற்ற நோய்கள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக் கான காப்பீட்டு தொகை குறித்து வெளிப் படைத்தன்மை இல்லை.

இந்த விபரங்கள் மருத்துவமனைகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு மட்டுமே தெரியும் நிலை யில், சிகிச்சை பெறும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். பு

திய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 100 சதவீத கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்பட வேண்டிய நிலையில், பல மருத்துவமனைகள் விதிமுறைகளுக்கு புறம்பாக நோயாளிகளிடம் முன்பணம் வசூ லித்து வருகின்றன.

மேலும், “காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முழுத் தொகை கிடைக்காது என்பதை அறிந்தே சிகிச்சை பெறுகிறேன்” என்ற வகையில் எழுத்துப்பூர்வமான ஒப்பு தல்களையும் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது அரசின் “Cashless Treatment” என்ற அடிப்படை நோக்கத்திற்கே எதிரான தாகும்.

மேலும், சிகிச்சைக்கான தொகை யை உடனடியாக காப்பீட்டு நிறுவனத்திடம் பெறுவதற்குப் பதிலாக, பின்னர் துறைகள் மூலம் மீளப்பெற நடவடிக்கை எடுக்குமாறு நோயாளிகளிடம் மருத்துவமனைகள் தெரி விப்பதும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது.

எனவே, புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு, சுகாதாரத்துறை, நிதித்துறை மற்றும் கருவூலத் துறை ஆகியவை உடனடியாக தலையிட்டு புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முழுமையான கட்டணமில்லா சிகிச்சையை உறுதி செய்ய வேண்டும்.

விதிமுறைகளை மீறும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், 30.6.2026-ல் முடிவடைய உள்ள புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை மீண்டும் செயல்படுத்தும் முன், அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் ஓய்வூ தியர் அமைப்புகளுடன் கருத்துக்கேட்பு நடத்தி, குறிப்பிட்ட சில சிகிச்சைகளுக்கு மட்டுமின்றி அனைத்து வகையான சிகிச்சைகளுக்கும் முழுமையான கட்டண மில்லா சிகிச்சையை உறுதி செய்யும் வகை யில் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.