தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாய்ப்பு வாசல்

19 Mar 2026, 3:18 pm
வாய்ப்பு வாசல்

தமிழ்நாடு  ஆசிரியர்  தகுதித் தேர்வு  2026

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கி வரும் அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்  பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பம் வெளியாகி உள்ளது. 2026 - ஆண்டிற்கான TNTET தேர்விற்கான ஆன்லைன் விண்ணப்பம் வெளியாகியுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் முறை:   ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) – 2026 மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்தத் தேர்வு இரண்டு நிலைகளாக நடைபெறும். Paper – I: 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்க விரும்பும் ஆசிரியர்களுக்கான தேர்வு. Paper – II: 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்க விரும்பும் ஆசிரியர்களுக்கான தேர்வு. தேர்வு நடைபெறும் நாட்கள் :  தாள் 1 - ஜூலை 4, 2026.  தாள் 2 - ஜூலை 5, 2026. விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ. 300, இதர பிரிவினர் ரூ. 600 செலுத்தி ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை :  இந்தப் பணியிட நிரப்புதல் குறித்த பாடவாரியான காலியிடங்களின் எண்ணிக்கை, தேர்விற்கான விண்ணப்பம், விரிவான பாடத்திட்டம், மதிப்பெண் விபரம் உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் அறிவிக்கையில் முழுமையாகத் தரப்பட்டுள்ளன. முழுமையான அறிவிக்கையைப் பெற என்ற  https://trb.tn.gov.in/ இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: ஏப்ரல் 10,  2026 ஆகும்.

என்ஐடி - யில் காலிப்பணியிடங்கள் 122

ஒன்றிய அரசின் கீழ் இயங்கி வரும் NIT ( National Institute of Techno logy) - கல்வி நிலையத்தில் பேரா சிரியர் & உதவி பேராசிரியர் களுக்கான 122 காலிப் பணி யிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பம் தற்போது வெளியாகியு ள்ளது. கல்வித் தகுதி : பொறியியல் /கலை & அறிவியல் போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக முனைவர்(Ph.D)  பட்டமும் பெற்றிருக்க வேண்டும் அல்லது GATE/ UGC NET /CSIR NET  தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு : உதவிப் பேராசிரியர்  ப்ரொபசர் பணிக்கு அதிகபட்சம் 35 -க்குள் இருக்க வேண்டும் இதர பணிகளுக்கு உச்சவரம்பு எதுவும் இல்லை. தேர்ந்தெடுக்கப்படும் முறை: விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி, பணி அனுபவம், கற்பிக்கும் திறன் ஆகிய வற்றின் அடிப்படையில் தகுதி யானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம் : பொது/ ஓபிசி பிரிவினர் ரூ. 2500 /. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ. 1,250 செலுத்தி ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை:  இந்தப் பணியிட நிரப்புதல் குறித்த பாடவாரியான காலி யிடங்களின் எண்ணிக்கை, தேர்விற்கான விண்ணப்பம், விரிவான பாடத்திட்டம், மதிப்பெண் விபரம் உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் அறிவிக்கை யில் முழுமையாகத் தரப் பட்டுள்ளன.  முழுமையான அறி விக்கையைப் பெற  https://www.nitt.edu/ என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி : ஏப்ரல் 6,  2026 ஆகும்.

ஒன்றிய அரசுத் துறையில் வேலைவாய்ப்பு

ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தேசிய தடய அறிவியல் மையத்தில் 51 காலிப்பணியிடங்களை நிரப்பவுள்ளனர். பிரிவு அலுவலர்(12), பிரிவுத் துணை அலுவலர்(14) மற்றும் உதவியாளர்(25) ஆகிய அனைத்துப் பணியிடங்களுக்குமே ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டியலின, பழங்குடியின, மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண் தேர்வர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது. எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இது குறித்த கூடுதல் விபரங்கள் முழுமையான அறிவிக்கையில் உள்ளன. அதை www.nfsu.ac.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி மார்ச் 23, 2026 ஆகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.