தமிழகத்தில் சர்க்கரை உற்பத்தி வீழ்ச்சி அரசு நடவடிக்கை எடுக்க கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
6 Jul 2026, 11:33 pm
<p><strong>தமிழகத்தில் சர்க்கரை உற்பத்தி வீழ்ச்சி அரசு நடவடிக்கை எடுக்க கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்</strong></p><p>தமிழகத்தில் சர்க்கரை உற்பத்தி வீழ்ச்சி அரசு நடவடிக்கை எடுக்க கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் திருவண்ணாமலை, ஜூலை 6- தமிழகத்தில் கடந்த 13 ஆண்டுகளில் சர்க்கரை உற்பத்தி பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ள நிலை யில், அதனைச் சீரமைக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதியில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் என்.பழனிச்சாமி தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். உற்பத்தி வீழ்ச்சிக்கான காரணங்கள் கூட்டத்திற்குப் பின் மாநில செயலாளர் டி.ரவீந்திரன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: "கடந்த 2011-12 கால கட்டத்தில் 24 லட்சம் டன்னாக இருந்த சர்க்கரை உற்பத்தி, தற்போது ஏழரை லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது. ஒன்றிய அரசின் போதிய விலை நிர்ணயம் இன்மை மற்றும் மாநில அரசு எஸ்.ஏ.பி. நிதியை நிறுத்தியது போன்ற வற்றால் விவசாயிகள் கரும்பு சாகுபடியைக் கைவிட்டு மாற்றுப் பயிர்க ளுக்கு மாறியுள்ளனர். உர விலை உயர்வால் விவ சாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.60,000 கோடி கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது." கோரிக்கைகள் தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிக ளுக்கு வழங்க வேண்டிய ரூ.1,200 கோடி பாக்கியை உடனடியாக பெற்றுத் தர வேண்டும். இதில் திரு வண்ணாமலை மாவட்ட ஆலைகள் மட்டும் ரூ.47 கோடி பாக்கி வைத்துள்ளன. மூடிக்கிடக்கும் அமரா வதி, மதுரை அலங்கா நல்லூர், ஆம்பூர் மற்றும் திருத்தணி உள்ளிட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை களைத் திறக்க வேண்டும். கூட்டுறவு ஆலைகளில் உள்ள காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண்டும். தேர்தல் வாக்குறுதிப் படி, சிறு, குறு விவசாயி களின் முழுப் பயிர்க்கடனை யும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்களுக்கு 50 சதவீத தள்ளுபடியையும் அரசு வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக வேளாண்மைத் துறை அமைச்சரைச் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.</p>
