தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தில்லி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்!

22 Jul 2026, 10:57 pm
தில்லி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக  தமிழகத்தில் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்!

தில்லி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்!

கோவை, ஜூலை 22 – ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக்கோரியும், தலைநகர் தில்லியில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கங்க ளின் சார்பில் எழுச்சிகரமான போராட் டங்கள் நடைபெற்று வருகிறது.

லட்சக்கணக்கான மாணவர்களின் மருத்துவக்கனவை சிதைக்கும் நீட் உள் ளிட்ட தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளின் முறைகேடுகளை கண்டித்தும், இதற்குப் பொறுப்பேற்று ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்யக் கோரியும் நாட்டின் தலைநகர் தில்லியில் வெடித்துள்ள மாணவர்-இளைஞர் போராட்டம் 3-வது நாளாக தொடர்கிறது.

இந்த அறப்போராட்டத்தை பேச்சு வார்த்தை மூலம் எதிர்கொள்வதற்குப் பதிலாக, தில்லி காவல்துறையும் துணை ராணுவப் படையினரும் தடியடி, கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீச்சு என மிகக் கொடூரமான அடக்குமுறையை ஒன்றிய மோடி அரசு ஏவியுள்ளது. தலைநகரில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட இத்தகைய வன்முறை தாக்குதலை கண்டித்தும், தில்லி மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித் தும் தமிழகம் உட்பட நாடு தழுவிய அளவில் போராட்டத் தீ பரவியுள்ளது. தமிழகத்தில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள் ளிட்ட முற்போக்கு அமைப்புகள் மாநி லம் தழுவிய அளவில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.

ஜனநாயக முறையிலான எதிர்ப்பு வடிவத்தைக்கூட எதிர்கொள்ள இய லாத தமிழக காவல்துறை அடாவடி யில் ஈடுபட்டு மாணவர்களை வலுக் கட்டாயமாக கைது செய்து வருகிறது. இதன்ஒருபகுதியாக கோவை ரயில் நிலையத்தில் இருந்து இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் பேரணியாக வந்தனர். தொடர்ந்து பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல் துறையினர் மாணவர்களை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.

இப்போராட்டத்தில் வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ராஜா, செயலாளர் தினேஷ் ராஜா, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் கு.பாவெல், செயலாளர் அக மது ஜூல்ஃபிகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு மாவட்டம், காளை மாடு சிலை அருகில் மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் த.நவீன் மற்றும் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஏ.விஸ் வநாதன் தலைமையில் கோரிக்கை பாதைகளை ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.

சிம்னி ஓட்டல் அருகில் எல்ஐசி அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே காவல் துறையினர் தடுத்தனர். இத னால் அப்பகுதியிலேயே அமர்ந்து காத் திருப்புப் போராட்டத்தை தொடர்வது என சாலையில் அமர்ந்தனர். இவ் வாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.

நீலகிரி நீலகிரி மாவட்டம், கூடலூரில் வாலி பர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இராசி இரவிக்குமார் தலைமையில் காத்திருப்புப் போராட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், வாலிபர் சங்க கூட லூர் ஏரியா செயலாளர் நெளபள், ஏரியா தலைவர் முகமது ரபிக், சிபிஎம் மூத்த தோழர் என்.வாசு, மாவட்டக் குழு உறுப் பினர்கள் சி.கே.மணி, தங்கராஜ், யோக சசி, நிஷாத், ஷெரீப் உள்ளிட்ட பலரும் கைதாகினர்.

திருப்பூர் திருப்பூர் தலைமை தபால் நிலை யத்தை மாணவர் மற்றும் வாலிபர் சங்கத்தினர் முற்றுகையிட்டுப் போராட் டம் நடத்தினர். முன்னதாக பேரணியாக சென்றவர்கள் அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவபொம்மையை எரித்த நிலையில், உடனடியாக காவல் துறை யினர் உருவபொம்மையில் தீயை அணைத்து எடுத்துச் சென்றனர். பின் னர் போராட்டக்காரர்களை தரதர வென்று இழுத்துச் சென்று கைது செய்த னர். இதில், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் க.நிருபன் சக்கரவர்த்தி, செய லாளர் கு.பாலமுரளி, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் விமல், செயலா ளர் எஸ்.மணிகண்டன் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.

நாமக்கல் நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் கிளை செயலாளர் கவின் தலை மையில் மாணவர்கள் வகுப்பு புறக் கணிப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் தங்கராஜ், கிளை நிர்வாகிகள் பிரவீன், பிரசாந்த் உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். இதேபோன்று தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாமக்கல் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

சங்க மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில், மாவட்டப் பொரு ளாளர், துப்புரவு ஆய்வாளர் செல் வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். சேலம் சேலம் கோட்டை பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தர்மேந் திர பிரதான் படத்தை கிழித்து எரிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். எம்.தேவி, வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் பெரியசாமி, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் டார்வின், இளம் வழக்கறிஞர்கள் விஜயகுமார், பகத் சிங் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தேர்வுகளின் நம்பிக்கை தன்மையே கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள சூழ லில், அடக்குமுறைகள் மூலமாக மாண வர்களின் கொந்தளிப்பை ஒருபோதும் அடக்கிவிட முடியாது என்பதை தில்லி யிலும் தமிழகத்திலும் தீவிரமடைந்து வரும் போராட்டங்கள் உணர்த்துகின் றன. ஒன்றியக்கல்வி அமைச்சர் உடனடி யாகப் பதவி விலகும் வரை போராட்டங் கள் ஓய்வடையாது என மாணவர் அமைப்புகள் திட்டவட்டமாக எச்சரித் துள்ளது குறிப்பிடத்தக்கது.

நீட் எதிர்ப்பு கூட்டியக்கம் போராட்டம்

அறிவிப்பு கோவை, காந்திபுரத்தில் புதனன்று நீட் எதிர்ப்பு கூட்டியக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தில்லியில் போராடி வருபவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கோவை மாவட்டத்தில் ஜூலை 24, 25, 26 ஆகிய மூன்று நாட்களில் தொடர் தர்ணா போராட் டம் நடத்துவது என்றும், இப்போராட்டம் வரும் ஜூலை 24 ஆம் தேதி காலை 9 மணிக்கு சிவானந்த காலனி - டாடாபாத் சந்திப்பில் தொடங்கி மாலை 5 மணி வரை தொடர் முழக்கப் போராட்டமாக நடைபெறும். நீட் தேர்வு எதிர்ப்பாளர் கள் அனைவரும் இதில் பங்கேற்று டெல்லியில் போராடும் மாணவர்கள் இளை ஞர்களுக்கு ஆதரவு தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.