தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் மாணவர்கள் உணவு புறக்கணிப்புப் போராட்டம்

20 Jul 2026, 9:04 pm
நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் மாணவர்கள் உணவு புறக்கணிப்புப் போராட்டம்

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் மாணவர்கள் உணவு புறக்கணிப்புப் போராட்டம்

சென்னை, ஜூலை 20- நீட் தேர்வுக்கு எதிராக தில்லி யில் நடைபெறும் போராட்ட த்தை ஆதரித்து, திங்களன்று (ஜூலை 20) தமிழ்நாடு முழு வதும் மாணவர்கள் ஒரு வேளை உணவு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், வினாத்தாள் கசி வுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிர தான் பதவி விலக வேண்டும், நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்தத் தகுதியற்ற தேசிய தேர்வு முகமையை (NTA) கலைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி, போராட்டக்காரர்கள் தில்லியில் 22 நாட்களாக அறப்போராட்டம் நடத்தி வந்த னர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்று 21 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த கல்வியாளர் சோனம் வாங்சுக் வலுக்கட்டா யமாகக் கைது செய்யப்பட்டார்.

ஜூலை 20 அன்று நாடாளு மன்றம் நோக்கி ஊர்வலம் சென்றவர்கள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசி அதிர டிப்படையினர் தடியடி நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துத் தமிழகம் முழுவதும் ஒருவேளை உணவு புறக்கணிப்புப் போராட்டம் நடத்த இந்திய மாணவர் சங்கம் அறைகூவல் விடுத்தது. இதனையொட்டி மாநிலம் முழு வதும் மதிய உணவு புறக் கணிப்பு, உண்ணாவிரதம் மற்றும் ஊர்வலம் போன்ற வடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு முன்பு நடைபெற்ற உண்ணா விரதப் போராட்டத்தை இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி. மிருதுளா தொடங்கி வைத்தார். இதில் கிளைத் தலைவர் சக்தி, செயலாளர் ஆர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் தென்சென்னை மாவட்டத் தலைவர் அமர்நீதி, செயலாளர் எஸ்.ஆனந்தகுமார், மாவட்டக் குழு உறுப்பினர் அனுஷ்கா உள்ளிட்டோர் உரையாற்றினர். அதேபோல், சென்னை பல்கலைக்கழகத்தில் நடை பெற்ற மதிய உணவு புறக் கணிப்புப் பேரணிக்கு மத்திய சென்னை மாவட்டத் துணைத் தலைவர் எம். சாரதி தலை மை தாங்கினார். இந்தப் பேர ணியில் மாநிலச் செயலாளர் தௌ.சம்சீர் அகமது, மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், செய லாளர் கு. தமிழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருத்து களைப் பகிர்ந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.