முந்தய பக்கம்

ஸ்கேட் போர்டு விளையாட்டுப் போட்டியில் சிறுமி அசத்தல்

1 Nov 2026, 1:22 am
ஸ்கேட் போர்டு விளையாட்டுப் போட்டியில் சிறுமி அசத்தல்

ஸ்கேட் போர்டு விளையாட்டுப் போட்டியில் சிறுமி அசத்தல்

உதகை, அக். 31-மாநில அளிவிலாள ஸ்கேட் போர்டுவிளையாட்டு போட்டியில் திருவண்ணாமலையை சேர்ந்த சிறுமி தங்கம் வென்று அசத்தியுள்ளார்.உதகையில் உள்ள அரசு ஸ்கேட்டிங்மைதானத்தில், 36-ஆவது தமிழ்நாடு மாநில ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்-2026 போட்டிகள் வெள்ளியன்று தொடங்கின. வரும் நவம்பர் 6-ஆம் தேதிவரை 8 நாட்கள் நடைபெறவுள்ள இப்போட்டியில், மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளானவெள்ளியன்று 5 முதல் 8 வயதுப் பிரிவினருக்கான போட்டிகள் நடைபெற்றன.

இதில் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் கலந்து கொண்ட திருவண்ணாமலையை சேர்ந்த சிறுமி ஜே.என். நிவிஷாஸ்ரீ இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். வெற்றி பெற்ற அவருக்கு,நீலகிரி மாவட்ட விளையாட்டு அலுவலர் பி. இந்திரா தங்கப் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார்.

ஏற்கெனவே மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பல பதக்கங்களைக் குவித்துள்ள நிவிஷாஸ்ரீ, இப்போட்டியின் மூலம் கர்நாடக மாநிலம் சிந்தாமணியில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார். இந்நிகழ்வில் தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் சங்கச் செயலாளர் நடராஜன், பொருளாளர் ராஜீவ், பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டுஅமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram