முந்தய பக்கம்

சிறந்த விளையாட்டு கொள்கையை உருவாக்க அரசு நடவடிக்கை!

29 May 2026, 8:43 pm
சிறந்த விளையாட்டு கொள்கையை  உருவாக்க அரசு நடவடிக்கை!
<p><strong>சிறந்த விளையாட்டு கொள்கையை உருவாக்க அரசு நடவடிக்கை!</strong></p><p>சென்னை, மே 29 - தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் சேர்ந்து பயில்வதற்கு, 495 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார். நேரு உள்விளையாட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதியில் பள்ளி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், இக்கலந்தாய்வில் தடகளம், கூடைப்பந்து, வாள்வீச்சு, கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, ஜுடோ, கபாடி, நீச்சல், டேக்வோன்டோ, வாலிபால், பளுதூக்குதல், வுஷு ஆகிய விளையாட்டுகளுக்கு விளையாட்டு விடுதி சேர்க்கை நடைபெற்றது. 40 விளையாட்டு விடுதிகளில் கடந்தாண்டு வரை 2,517 மாணவர்கள் தங்கி பயின்று வந்தனர். தற்பொழுது மாவட்ட மற்றும் மாநில அளவில் தேர்ச்சி பெற்றவர்களில் முதல் 344 மாணவர்கள் மற்றும் 151 மாணவியர்கள் என மொத்தம் 495 மாணவர்கள், இந்த கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன” என்றார். நிகழ்ச்சியில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் சஜ்ஜன்சிங் ரா சவான், ஜெ. மேகநாத ரெட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram