பணி முடித்தும் பணம் வரவில்லை: திகைக்கும் சிறு ஒப்பந்ததாரர்கள் - ஆரூரான்
21 Jun 2026, 9:18 pm

பணி முடித்தும் பணம் வரவில்லை: திகைக்கும் சிறு ஒப்பந்ததாரர்கள் - ஆரூரான்

தமிழகம் முழுவதும் அரசு சார்ந்த கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள், கிராமச் சாலை கள், பூங்கா மற்றும் படித்துறை பரா மரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணி களைப் பொதுப்பணித்துறை ஒப்பந்த தாரர்களும், ஊராட்சி அளவிலான சிறு ஒப்பந்ததாரர்களும் மேற் கொண்டு வருகின்றனர்.

இந்நிலை யில், கடந்த 2021-ஆம் ஆண்டு செய்த பணிகளுக்குக்கூட இதுவரை பணம் கிடைக்காததால் ஒப்பந்ததாரர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இப்பிரச்சினை குறித்து உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் பயனற்றதால், சில மாதங் களுக்கு முன்பு சென்னை எழி லகத்தில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 11 அன்று சென்னை சிவானந்தா சாலையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றது. கடந்த 2021-இல் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற மராமத்துப் பணிகளுக்கு இன்றுவரை அரசு பணம் வழங்கவில்லை என ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த 4 ஆண்டு களாகச் சென்னையில் மட்டும் இது போன்ற சிறிய பணிகளுக்காக ரூ. 29.22 கோடியும், தமிழகம் முழுவதும் மேலும் ரூ. 20 கோடியும் நிலுவையில் உள்ளது. இப்பணிகளைச் செய்த சிறு ஒப்பந்ததாரர்களுக்கு 4 ஆண்டு கால வட்டியைக் கணக்கிட்டால் பெரும் நஷ்டமே மிஞ்சும். இதனால் வருங்காலத்தில் யாரும் அரசுப் பணி களைச் செய்ய முன்வரமாட்டார்கள்.

இவ்விஷயம் அரசின் கவனத் திற்குச் சென்ற பின்பும், அதிகாரி கள் கோப்புகளைச் சரிபார்த்து நிலு வைத் தொகையை வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெரும் வசதி படைத்த ஒப்பந்த தாரர்களுக்குப் பாதிப்பு இல்லை என்றாலும், ஊராட்சி அளவில் சிறிய பணிகளை முடித்த கிராமப்புற ஒப்பந்ததாரர்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர்.

உரிய நேரத்தில் பணம் பட்டுவாடா ஆகாத அவல நிலை புதிய ஆட்சி அமைந்த பிறகும் தொடர்கிறது. எனவே, தற்போதைய புதிய அரசும், முதல்வ ரும், சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளும் இதில் உடனே கவனம் செலுத்தி நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்கள் எதிர்பார்க்கிறார்கள். - ஆரூரான்