தமிழகம் விழிப்புடன் இருக்க வேண்டும்! மதுரையில் கமல்ஹாசன் பேட்டி
15 Nov 2025, 4:09 pm
<p><strong>தமிழகம் விழிப்புடன் இருக்க வேண்டும்! மதுரையில் கமல்ஹாசன் பேட்டி</strong></p>
<p>மதுரை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி., கொடைக்கானல் செல்வதற்காக, சென்னையில் இருந்து வெள்ளியன்று பகல் மதுரை வந்தார். அப்போது, விமான நிலையத்தில் அவர் செய்தி யாளர்களிடம் பேசியதாவது: பீகாரில், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று உள்ளது. அதை விமர்சன ரீதியாக பார்க்க வேண்டும். தமிழகமும் கவனமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும். புதிதாக கட்சி தொடங்குபவர்கள் தி.மு.க.வை எதிரி என்று கூறி வருகிறார்கள். யாராக இருந்தாலும், இலக்கை உயர் வாக வைக்க வேண்டும். அதற்காக அவர்கள் அப்படி கூறலாம். உதாரணத்திற்கு நடிக்க வேண்டும் என்று சொன் னால், இருப்பதிலேயே சிறந்த நடிகர் போல எனது பிள்ளை வரவேண்டும் என்று நினைப்பார்கள். ஏழையாக இருப்பவர்கள் கூட தனது பிள்ளையை கொஞ்சும்போது, மகராசன் என்று தான் கொஞ்சுவார்கள். இது எல்லோ ருக்கும் இருக்கும் ஆசைதான் . இவ்வாறு கமல் ஹாசன் கூறினார். </p>
