முந்தய பக்கம்

கேலோ இந்தியா களரிப்பயட்டு போட்டியில் தமிழ்நாடு 7 பதக்கங்களை வென்று சாதனை

20 Jan 2026, 2:46 pm
கேலோ இந்தியா களரிப்பயட்டு போட்டியில் தமிழ்நாடு 7 பதக்கங்களை வென்று சாதனை
<p><strong>கேலோ இந்தியா களரிப்பயட்டு போட்டியில் தமிழ்நாடு 7 பதக்கங்களை வென்று சாதனை</strong></p> <p>உடுமலை ஜன.20- தேசிய அளவில் நடைபெற்ற கேலோ இந்தியா களரிப் பயட்டு போட்டியில் தமிழக வீரர்கள் 7 பதக்கங்களை வென்று &nbsp;சாதனை படைத்துள்ளனர். கேலோ இந்தியா களரிப்பயட்டு தேசிய லீக் (18 வயதுக்குட் பட்டோர்) போட்டிகள் ஜன.17, 18 ஆகிய தேதிகளில் திரு வனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை ஒன்றிய &nbsp;விளையாட்டு ஆணையம் மற்றும் இந்திய களரிப்பயட்டு &nbsp;கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்தின. 16 மாநிலங்க ளில் இருந்து மொத்தம் 124 இளம் வீரர்கள், களரிப்பயட்டின் &nbsp;8 முக்கியப் பிரிவுகளில் போட்டியிட்டனர். தமிழ்நாட்டில் இருந்து 12 மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர். &nbsp;இதில் தமிழ்நாடு மொத்தம் 7 பதக்கங்களை வென்றது. 1 தங்கம், 2 வெள்ளி, மற்றும் 4, வெண்கல பதக்கங்களை வென் றது. தமிழக வீரர்களின் ஜீவா 2 வெள்ளி, 2 வெண்கலம், சுர்ஜித் &nbsp;1 தங்கம், பிரவீன் பிரசாத் 1 வெள்ளி, சுகைல் 1 வெள்ளி, தேசிகா &nbsp; 1 வெண்கலம், யாஷிகா 1 வெண்கலம் வென்றனர். இதில் &nbsp;வெண்கல பதக்கம் வென்ற பிரவீன் பிரசாத் மடத்துக்குளம் &nbsp;அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் என்பது குறிப்பிடத்தக் கது. வெற்றி பெற்ற மாணவர்களை களரிப்பயிட்டு &nbsp;அசோசி யேஷன் ஆப் &nbsp;தமிழ்நாடு செயலாளர் வீரமணி ஆசான் மற்றும் &nbsp;தலைவர் தேவராஜன் ஊர் பொதுமக்கள் வாழ்த்தி வர வேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram