செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாக திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்
30 Jan 2026, 5:56 pm
<p><strong>செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாக திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்</strong></p>
<p>கல்பாக்கம்,ஜன,30- செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத் திட்டத்தை (IVC) மத்திய அரசு உடனடியாக விரைவுபடுத்திச் செயல் பாட்டிற்குத் தேசத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கம் பகுதியில் ச.தீனதயாளன் தலைமையில் நடைபெற்ற அறிவியல் இயக்கத்தின் 17- ஆவது மாவட்ட மாநாட்டில் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய மாநிலச் செயலா ளர் எல்.நாராயணசாமி, இந்தியாவின் சுகா தாரப் பாதுகாப்பு மற்றும் தொற்றுநோய் தடுப்புத் திட்டங்களை வலுப்படுத்த இந்தத் தடுப்பூசி வளாகம் மிக அவசியமானது என்று குறிப்பிட்டார். இந்த மாநாட்டில் 'இயற்கை மனித அறிவின் வளர்ச்சி' என்ற தலைப்பில் அறிவி யல் மொழிபெயர்ப்பாளர் மா.சிவகுமார் சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, மாவட்டச் செயலாளர் பெ.பொன் சிவகுமார் மற்றும் பொருளாளர் ஆ.குமார் ஆகியோர் அறிக்கைகளைச் சமர்ப்பித்தனர். இக்கூட் டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், தடுப்பூசி உற்பத்தியில் இந்தியா வெளி நாட்டுச் சார்பைக் குறைத்துத் தன்னிறைவு பெற வேண்டும் என்றும், குழந்தைகளுக்குத் தடையின்றித் தடுப்பூசி கிடைக்கத் தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை அரசு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களைப் பின்பற்றி தமிழ்நாட்டிலும் 'மூடநம்பிக்கை ஒழிப்பு மற்றும் அறிவியல் மனப்பான்மை வளர்ப்புச் சட்டம்' இயற்றப்பட வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. நிகழ்வில் மருத்துவர்கள் மனோகரன், லட்சுமி பிரியா மற்றும் முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி.முனுசாமி உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டின் நிறை வாக, அறிவியல் இயக்கத்தின் புதிய மாவட்ட நிர்வாகிகளாகக் க.மல்லிகா (தலைவர்), பி.ரவி (செயலாளர்) மற்றும் பா.சீனிவாசன் (பொருளாளர்) உள்ளிட்ட 13 பேர் கொண்ட புதிய செயற்குழு தேர்வு செய்யப்பட்டது. முன்னாள் மாவட்டச் செயலாளர் சிவஞான சம்பந்தம் நன்றியுரையுடன் மாநாடு இனிதே நிறைவுற்றது.</p>
