தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே பாடநூல் விநியோகம் 3.72 கோடி புத்தகங்கள் தயார்

13 May 2026, 10:09 pm
பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே பாடநூல் விநியோகம்  3.72 கோடி புத்தகங்கள் தயார்

பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே பாடநூல் விநியோகம் 3.72 கோடி புத்தகங்கள் தயார்

சென்னை, மே 13- தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்குப் பாடநூல்கள் கிடைப் பதை உறுதி செய்யும் வகையில், பள்ளிக் கல்வித் துறை புத்தக விநியோகத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது.

முதற்கட்டமாக நடு நிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்கள் மாவட்டக் கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து பள்ளிகளுக்கு விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலம் 4 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக சுமார் 3.72 கோடி புத்தகங்கள் தற்போது கிடங்கு களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இதில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு மாநிலக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் புதிய புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதால், அவற்றின் விநியோகம் இந்த வார இறுதியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாம் வகுப்பிற்குத் தேவையான 13.01 லட்சம் புத்தகங்களில் 6.46 லட்சம் புத்தகங் களும், இரண்டாம் வகுப்பிற்கு 5.81 லட்சம் புத்தகங்களும், மூன்றாம் வகுப்பிற்கு 6.75 லட்சம் புத்தகங்களும் ஏற்கனவே விநியோ கத்திற்குத் தயாராக உள்ளன.

சென்னையில் உள்ள பாடநூல் கிடங்கு களை செவ்வாயன்று ஆய்வு செய்த பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ். கண்ணப்பன், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தற்போது புத்தகங் களைப் பெற்றுச் செல்லலாம் என்றும், தனி யார் பள்ளிகள் நேரடியாகக் கிடங்குகளில் கொள்முதல் செய்துகொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மீதமுள்ள புத்தகங்கள் அனைத்தும் மே 15-ஆம் தேதிக்குள் விநியோகிக்கப்படும் என்றும், ஜூன் மாதம் பள்ளி தொடங்கும் முதல் நாளிலேயே மாணவர்கள் கைகளில் புத்தகங்கள் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளதாகப் பாடநூல் கழக மேலாண் இயக்குநர் எம். ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.