ஜூன் 4 முதல் பள்ளிகள் திறப்பு தமிழக அரசு அறிவிப்பு
26 May 2026, 9:02 pm
<p><strong>ஜூன் 4 முதல் பள்ளிகள் திறப்பு தமிழக அரசு அறிவிப்பு </strong></p><p>சென்னை, மே 26 - தமிழ்நாட்டில் அனைத்து வகுப்புகளுக்கும் கோடை விடுமுறைக்கு பிறகு ஒரே நாளில் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். ஆரம்பத்தில் 1 முதல் 3ஆம் வகுப்புக்கு ஜூன் 4 ஆம் தேதியும், 4 முதல் 12ஆம் வகுப்புக்கு ஜூன் 1ஆம் தேதியும் என்று தனித் தனியாக அறிவிக்கப்பட்டிருந்தது. பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் ஒரே நாளில் அனைத்து வகுப்புகளும் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததை அடுத்தும், ஜூன் முதல் வாரத்தில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததையடுத்தும், முதலமைச்சர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி ஜூன் 4 ஆம் தேதி அரசு, அரசு உதவிபெறும், மெட்ரிகுலேஷன் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரே நாளில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக கழிப்பறை, குடிநீர், போக்குவரத்து உள்பட அனைத்து வசதிகளும் சரியாக இருக்க வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p>
