ஜூன் 1-இல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு!
18 May 2026, 9:06 pm

ஜூன் 1-இல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு!

சென்னை, மே 18 - தமிழகத்தில் கோடை விடு முறை முடி வடைந்து, ஜூன் 1 முதல் பள்ளி கள் திறக்கப் படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்து ள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த நிலையில், முதல்வராகப் பதவியேற்ற விஜய், தனது அமைச் சர்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் திங்களன்று (மே 18) ஆலோசனை நடத்தினார். அமைச் சர்கள் தங்களின் துறைகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அவர் வழிகாட்டி னார்.

இந்நிலையில், கோடைக்கால விடுமுறை முடித்து பள்ளிகள் திறப்பது குறித்தும், 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுடன் தனியாக முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து செய்தி யாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், “கோடை விடுமுறை முடிந்து, திட்டமிட்டபடி ஜூன் 1 அன்று தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படும்.

முதல் நாளே பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும் என்றார்

இருமொழிக் கொள்கை! காலை உணவுத் திட்டம் தொடரும்

பிஎம்ஸ்ரீ திட்டத்தின் அடிப்படையில் மும்மொழிக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்படுமா? என்ற கேள்விக்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பதிலளித்தார்.

அதில், “தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக்கொள்கை என்பது பள்ளிக் கல்வியில் மட்டும் கிடையாது, அது தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று. உறவுகளுடன் பேச தாய் மொழி, உலகத்துடன் பேச ஆங்கிலம் என்பது தான் கொள்கை. எனவே, மும்மொழி கொள்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் மே 20-ஆம் தேதி திட்டமிட்டபடி வெளியிடப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் கூறினார். அப்போது, செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.