உற்சாகத்துடன் திறக்கப்பட்ட பள்ளிகள்: மாணவர்களைக் கொண்டாடிய ஆசிரியர்கள்!
4 Jun 2026, 9:53 pm

திருப்பூர், ஜூன் 4- கோடை விடுமுறைக்குப் பிறகு, தமிழகம் முழுவதும் ஜூன் 4-ஆம் தேதி வியாழனன்று புதிய கல்வி யாண்டிற்கான பள்ளிகள் திறக்கப் பட்டன. ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், வெயி லின் தாக்கத்தை கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன் கருதி ஜூன் 4-ஆம் தேதிக்கு ஒத் திவைக்கப்பட்டது. 49 நாட்கள் விடு முறைக்கு பின், மலர்ந்த புதிய கல்வி யாண்டின் முதல் நாள் மாணவர்கள் புன்னகையோடும், புதிய சீருடை யோடும் பள்ளி வளாகங்களுக்குள் அடியெடுத்து வைத்தனர்.

கல்வியின் அவசியத்தையும், குழந்தைகளை மகிழ்வோடு பள்ளிக்கு அனுப்ப வேண்டியதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்க ளில் ஆசிரியர்களும், அதிகாரிக ளும் மாணவர்களை வரவேற்ற விதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

ரோஜா மலர் மற்றும் கல்கண்டு வரவேற்பு திருப்பூர் மாவட்டத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு ஆசிரி யர்கள் ரோஜா மலர்கள் மற்றும் கல்கண்டுகள் வழங்கி, இன் முகத்துடன் பள்ளிக்குள் அழைத் துச் சென்றனர். புகழ்பெற்ற திருப் பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டி ருந்த காவல்துறையினரும், ஆசிரி யர்களும் இணைந்து மாணவிக ளுக்கு இனிப்புகளை வழங்கி வர வேற்றனர்.

வண்ணமயமான பேண்ட் வாத் தியங்கள் முழங்க, மாணவிகள் பள்ளிக்குள் ஊர்வலமாக அழைத் துச் செல்லப்பட்டு வகுப்பறைக ளில் அமர வைக்கப்பட்டனர். மேலும், மாணவிகள் பள்ளிக்கு மொபைல் போன்களை எடுத்து வரக்கூடாது என்ற விழிப்புணர்வு அறிவுரையும் போலீசாரால் வழங் கப்பட்டது. குழந்தைகளை பிரிந்து செல்ல மனமில்லாமல் வாயில் அருகில் நின்ற பெற்றோர் களுக்கு ஆசிரியர்கள் உரிய அறி வுரைகளைக் கூறி அனுப்பி வைத் தனர்.

ரிப்பன் வெட்டி வகுப்பறைக்குள் நுழைந்த மாணவர்கள் நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள அரசுப் பள்ளியில், மாண வர்களே ரிப்பன் வெட்டி தங்களது பள்ளியைத் திறந்து, வகுப்பறை களுக்குள் சென்றது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆசி ரியர்கள் மலர் தூவியும், இனிப்பு கள் வழங்கியும் மாணவர்களை வர வேற்றனர்.

மாணவர்களின் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசின் காலை சிற்றுண்டித் திட்டத்தின் மூலம் சுவையான உணவு பரிமாறப்பட்டது.

இதனை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் சென்று ஆய்வு செய்ததுடன், உணவின் தரம் குறித்து குழந்தைகளிடம் அன்போடு கேட்டறிந்தார்.

கார்ட்டூன் கதாபாத்திரங்களின் வரவேற்பு கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குழந்தைகளைக் கவரும் வகை யில் வண்ண ஓவியங்கள், வர வேற்பு வளையங்கள், மிட்டாய்கள் மற்றும் கார்ட்டூன் கதாபாத்திர வேட மணிந்த நபர்களைக் கொண்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட் டது. சில பள்ளிகளில் குழந்தை களை மகிழ்விக்க கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களையும் ஆசிரியர்களை யும் கண்ட மகிழ்ச்சியில் மாணவர் கள் திளைத்தனர்.

பள்ளி துவங்கிய முதல் நாளிலேயே மாணவர்களுக் குத் தேவையான பாடப்புத்தகங் கள் மற்றும் சீருடைகளை வழங்க வும் விரிவான ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.

கல்வியின் அவசியத்தை உணர்ந்த தமிழ்நாடு வெறும் பாடப்புத்தகங்களை மட்டும் திணிக்காமல், பள்ளிக் கூடங்கள் என்பவை அறிவை வளர்க்கும் நந்தவனங்கள் என் பதை உணர்த்தும் வகையில் இந்த வரவேற்பு நிகழ்ச்சிகள் அமைந்தி ருந்தன.

கல்வியே ஒரு சமூகத்தின் ஆகச்சிறந்த ஆயுதம் என்பதைப் புரிந்து, குழந்தைகளை பய மின்றி, மகிழ்ச்சியோடு பள்ளிக்கு வரவழைத்த ஆசிரியர்களின் அணு குமுறை பாராட்டை பெற்றுள்ளது.