தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கேட்போராக இருந்த  குழந்தைகளை வாசிப்போராக  மாற்றும் கல்விப் புரட்சி!

27 Jun 2026, 9:06 pm
கேட்போராக இருந்த  குழந்தைகளை வாசிப்போராக  மாற்றும் கல்விப் புரட்சி!
<p><strong>கேட்போராக இருந்த &#160;குழந்தைகளை வாசிப்போராக &#160;மாற்றும் கல்விப் புரட்சி!</strong></p><p>அரசுப் பள்ளி மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை ‘வாசிப்பு இயக்கம்’ என்ற உன்னதமான திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா கதைப்புத்தகங்கள் அண்மையில் வழங்கப்பட்டன. தேவகோட்டை வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்திகேயன் மாணவர்களுக்குப் புத்தகங்களை வழங்கிச் சிறப்புரையாற்றினார். பள்ளித் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஆசிரியை சிவரஞ்சனி வரவேற்க, ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார். மாணவர்களின் வயதிற்கும் வாசிப்புத் திறனுக்கும் ஏற்ப ‘நுழை’, ‘நட’, ‘ஓடு’, ‘பற’ என்ற நான்கு நிலைகளில், ‘ஒரு கதை – ஒரு புத்தகம் – 16 பக்கங்கள்’ என்ற அடிப்படையில் இந்த நூல்கள் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுவரை பெரியவர்கள் சொல்லும் கதைகளைக் ‘கேட்போராக’ மட்டுமே இருந்த குழந்தைகளை, தாங்களாகவே நூல்களைப் படித்து மகிழும் ‘வாசிப்போராக’ மாற்றுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். எளிய குடும்பங்களைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் கைகளில் இத்தகைய வண்ணமயமான புத்தகங்களைக் கொண்டு சேர்ப்பது, எதிர்காலத்தில் ஓர் அறிவார்ந்த சமூகத்தைக் கட்டியெழுப்பும் மிக முக்கியமான கல்விப் புரட்சியாகும்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.