முந்தய பக்கம்

இனி கதைகள் வழியே கணித பாடம்!பள்ளிக் கல்வித் துறை தகவல்

8 Aug 2026, 10:12 pm
இனி கதைகள் வழியே கணித பாடம்!பள்ளிக் கல்வித் துறை தகவல்

இனி கதைகள் வழியே கணித பாடம்!பள்ளிக் கல்வித் துறை தகவல்

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு கணிதபாடத்தின் மீதான அச்சத்தைப் போக்கி, சுலபமாகக்கற்றுக் கொடுக்கும் வகையில் கணித பாடங்களின் தலைப்புகளை மாற்றவும், கதைகள் வழியே கணிதத்தைக் கற்பிக்கவும் தமிழக பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும்,ஆர்வம் தூண்டும் வகையிலும் கணித பாடப் புத்தகங்களிலுள்ள சிக்கலான தலைப்புகள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.உலர்வான சூத்திரங்களாக இல்லாமல், கதைகளினூடே கணிதக் கருத்துகளை விவரிக்கும் புதிய கற்பித்தல் முறை(Story-based learning) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய புத்தகங்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கு ஏற்ப ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எளிதில் கற்பிக்கத் தேவையான பயிற்சிகளும் மாற்றங்களும்மேற்கொள்ளப்படும். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களிடையே கணக்குப் பாடத்தைப் பற்றிய பயத்தை நீக்கி, அவர்களின் பகுப்பாய்வு மற்றும் சிந்தனைத் திறனை இயல்பாகவே வளர்ப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

Share
FacebookXWhatsAppTelegram