இது தூய்மையானது அல்ல!
yesterday

இது தூய்மையானது அல்ல!

உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணி உள்ளிட்ட பணிகளை தனியார்மயமாக்குவ தைக் கைவிட்டு உள்ளாட்சி நிர்வாகம் இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. தூய்மைப் பணியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதால் ஒப்பந்தப் பணியாளர்கள் கடுமையான உழை ப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவதோடு, தூய் மைப் பணியும் சரிவர நடப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 12 மாநக ராட்சிகளில் திடக்கழிவு சேகரிப்பு மற்றும் போக்கு வரத்துப் பணிகளை அரசு - தனியார் ஒத்துழைப்பு என்ற பெயரில் தனியார்மயமாக்குவதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்க தனியார் நிறுவ னத்தை நியமிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒப்பந்தம் மற்றும் வெளி முகமை, பிபிபி உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் தூய்மைப் பணி தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப் படுவதால் தூய்மைப் பணியாளர்களுக்கு மிகக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது என்பது மட்டுமின்றி அவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமை மறுக்கப்படு கிறது.

கடந்த கால திமுக ஆட்சியின்போது சென்னை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளில் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் நீண்ட நெடிய போராட்டங்களை நடத்தினர். அப்போது தமிழக வெற்றிக் கழகம் தூய்மை பணியாளர் கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படு வார்கள் என்று கூறியது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த வாக்குறுதிக்கு மாறாக தூய்மைப் பணியை தனியார்மயமாக்கும் நட வடிக்கை ஏற்கத்தக்கது அல்ல.

தொழிலாளர்களை வஞ்சிப்பது மட்டுமல்ல, பல்வேறு வகையான மோசடிகளிலும் தனி யார் நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. உதாரண மாக மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணியை ஒப்பந்த முறையில் மேற்கொண்ட அவர்லேண்ட் என்ற நிறுவனம் குப்பைக்கு பதிலாக கற்கள், மணலை எடை போட்டு கணக்கு காட்டி கோடிக் கணக்கான ரூபாயை சுருட்டியது அம்பலமா னது.

இதற்காக மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்த நிலையில், சித்திரைத் திருவிழா வின்போது அவர்லேண்ட் நிறுவனம் தூய்மைப் பணி மேற்கொள்ளாமல் மாநகராட்சியையும், மக்களையும் மிரட்டியது. அதுமட்டுமின்றி இந்த தனியார் நிறுவனங்கள் மக்கள் பிரதிநிதிகளை மதிப்பதில்லை; உரிய வாகனங்களை ஏற்பாடு செய்வதில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில் தூய்மைப் பணியை தனியா ருக்கு ஒப்படைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். உள்ளாட்சி நிர்வாகங்களே தூய்மைப் பணியை நிரந்தரப் பணியாளர்களை அமர்த்தி மேற்கொள்ள வேண்டும்.