கிராமிய சுற்றுலா திட்டம்: அமைச்சர் அறிவிப்பு
19 Aug 2026, 9:28 pm

கிராமிய சுற்றுலா திட்டம்: அமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஆக. 19 -தமிழ்நாட்டில் கிராமிய சுற்றுலாவை மேம்படுத்தி கிராமப் பொருளாதாரம், கலாச்சாரப் பாதுகாப்பு மற்றும் கைவினைப் பொருட்களை ஊக்குவிக்க புதிய ‘கிராமிய சுற்றுலா திட்டம்’ அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் செ. ராஜேஷ்குமார் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். 2024-ல் 30.80 கோடியாக இருந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2025-ல் 36.47 கோடியாக உயர்ந்துள்ளது. கோடி

யக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு 1 லட்சத்திற்கும் அதிகமான இடம்பெயரும் பறவைகள் வந்து செல்கின்றன. முட்டுக்காடு, ஊட்டி உள்ளிட்ட 15 படகு இல்லங்களுக்கு 40.48 லட்சம் பயணிகள் வருகை தந்ததன் மூலம் ரூ.45.60 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

புதிய திட்டங்கள்

சுற்றுலா மையக் கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.30 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். பெண் பயணிகள் பாதுகாப்பிற்கு முக்கிய இடங்களில் ‘ஏஐ’ கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மதுரை, திருச்சி, தஞ்சாவூர், பூம்புகார், ஒகேனக்கல் ஆகிய 5 இடங்களில் பாதுகாப்பு அமைப்புகள் உருவாக்கப்படும். உதகை மற்றும் கொடைக்கானலில் ரோப்கார் வசதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.