தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட பேரவை
6 Jul 2026, 12:10 am

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட பேரவை

திருப்பத்தூர், ஜூலை 5- திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார் பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வெள்ளியன்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 4வது மாவட்ட பேரவை கூட்டம் மாவட்ட தலைவர் பிரேம்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இணை செயலர் கார்த்தி அஞ்சலி தீர்மானம் வாசித்தார், மாவட்ட துணை தலை வர் பாண்டியன் வரவேற்புரை ஆற்றினார். இதில் மாநில துணை தலைவர் திருவேரங் கன் கலந்து கொண்டு பேரவை கூட்டத்தை துவக்கி வைத்து துவக்கவுரையாற்றினார். மாவட்ட செயலாளர் விஜயகுமார் வேலை அறிக்கையையும் மாவட்ட பொருளாளர் இளையராஜா நிதிநிலை அறிக்கையையும் வாசித்தனர். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் நேரு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ராஜ் குமார், முன்னாள் மாவட்ட தலைவர் சேகர், ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். மாநில துணை தலைவர் இளங் குமரன் நிறைவுரை ஆற்றினார், முடிவில் மாவட்ட இணை செயலாளர் ஆசை தம்பி நன்றி கூறினார். இந்தப் பேரவையில் தலைவராக பிரேம்குமார், செயலாளராக விஜயகுமார், பொருளாளராக இளையராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.