வருவாய்த்துறை அலுவலர் சங்க பொதுக்குழு
5 Oct 2026, 1:17 am

வருவாய்த்துறை அலுவலர் சங்க பொதுக்குழு

சேலம், அக்.4-அரசு துறையில் அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்து படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க சேலம் மாவட்டபொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சேலம் மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் சேலம், அண்ணா பார்க் பகுதியில் உள்ள தமிழ் சங்க வளாகத்தில் சனியன்று நடைபெற்றது. கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சங்கத்தின் மாநிலப் பொருளாளர் மணிகண்டன் சிறப்புரையாற்றினார்.

இதில், ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆத்தூர் வருவாய் கோட்டத்தை ஆத்தூர் தலைவாசல் கெங்கவல்லி பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய வட்டங்களில் ஆத்தூரை தலைமை இடமாக கொண்டும் தலைவாசலை தலைமை இடமாக கொண்டும் செயல்படுத்த வேண்டும். அரசு துறையில் அவுட்சோர்சிங் முறையை கைவிட்டு, படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் வலியுறுத்தியதை எடுத்துரைத்தனர்.கோரிக்கைகள், காலதாமதம் செய்யப்பட்டால் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஒன்று கூடி அடுத்த கட்ட நிலவரம் குறித்து முடிவு எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சங்கத்தின் மாவட்டத் தலைவராக அ.அருள் பிரகாஷ், செயலாளராக கோபாலகிருஷ்ணன், பொருளாளராக மா.அகிலன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக மாநில துணைத்தலைவர் வெ.அர்த்தநாரி நிறைவுயாற்றினார்.