முந்தய பக்கம்

தமிழ்நாடு ஆராய்ச்சி மையம் தொடக்கம்

14 Mar 2026, 2:57 pm
தமிழ்நாடு ஆராய்ச்சி மையம் தொடக்கம்
<p><strong>தமிழ்நாடு ஆராய்ச்சி மையம் தொடக்கம்</strong></p> <p>சென்னை, மார்ச் 14 - தமிழ்நாடு ஆராய்ச்சி மையத்தின் (சென்டர் பார் ரிசர்ச் ஆன் தமிழ்நாடு-சிஆர்டி என்) இலட்சினை வெளியீடு மற்றும் இணைய தளம் துவக்க நிகழ்வு சனிக்கிழமையன்று (மார்ச் 14) சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்நாட்டின் சமூக, பண்பாடு, மானுடவியல், பொருளாதாரம், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி புலமையை ஊக்கு விப்பதை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு ஆராய்ச்சி மையம் உரு வாக்கப்பட்டுள்ளது. அனைத்து துறை அறிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்களை ஒன்றிணைக்கும் பொதுத்தளமாக இந்த மையம் செயல்படும் என்று நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது. உரையாடல், ஆவணப்படுத்தல் மற்றும் கூட்டு ஆராய்ச்சிக்கான தளங்களை உரு வாக்குவதன் மூலம் நிறுவனம் சார்ந்த ஆராய்ச்சிகளை கள யதார்த்தங்களுடன் இணைக்கும் வலைப்பின்னலை உரு வாக்கும் குறிக்கோளோடு இந்த மையம் செயல்படும். கருத்தரங்கு, கலந்துரை யாடல், விவாதம், ஆராய்ச்சி பயிற்சி பட்டறை மற்றும் மாத வெளியீடு களை இம்மையம் தொடர் நிகழ்வு களாக மேற்கொள்ளும் என்றும் தெரி விக்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியத் துறைத் தலைவர் பேரா.அப்துர் ரகுமான், மானுடவியல் துறைத்தலைவர் பேரா.எம்.பி.தாமோதரன், பொருளாதார அறிஞர் பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா ஆகியோர் மையத்தினை அறிமுகம் செய்து பேசினர். மேலும், மையத்தின் இலட்சினையை வெளியிட்டு, இணைய தளத்தையும் தொடங்கி வைத்தனர். இதன் தொடர்ச்சியாக எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் &lsquo;தமிழ்ச்சிறுகதையின் தடங்கள்&rsquo; நூலின் சிறுகதையாளர்கள் குறித்து வட்டமேசை உரையாடல் நடத்தப்பட்டது. தமிழ்நாடு ஆராய்ச்சி மையம், சென்னைப் பல்கலை. மானுட வியல் துறை, மாற்றுக்களம் பதிப்ப கம் இணைந்து இந்நிகழ்வை நடத்தின. பல்கலை.யின் தமிழ் துறை இளம் ஆய்வாளர்களை கொண்டு நடத்தப் பட்ட இந்நிகழ்வில் நூலாசிரியர் ச.தமிழ்ச் &nbsp;செல்வன் நிறைவுரை ஆற்றினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram