பதிவுத் துறையில் அக்டோபரில் ரூ.1,950 கோடி வருவாய்!
5 Nov 2026, 10:55 pm

பதிவுத் துறையில் அக்டோபரில் ரூ.1,950 கோடி வருவாய்!

சென்னை, நவ. 5 –பத்திரப் பதிவுத் துறைக்கு2026 அக்டோபர் மாதத்தில் ரூ.1,950 கோடி வருவாய் கிடைத் துள்ளது. இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தைவிட ரூ.147 கோடிஅதிகமாகும்.சென்னை பாரிமுனை வடக்கு மாவட்டப் பதிவாளர் அலுவலகக் கூட்டரங்கில், பதிவுத்துறை அலுவலர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது, ஆகஸ்ட் 17-ஆம் தேதி தொடங்கப்பட்ட வருகையில்லா ஆவணப் பதிவு முறையில்,நவம்பர் 3-ஆம் தேதி வரை 2,46,260 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.இதில், மனைப்பிரிவுகள் மற்றும்அடுக்குமாடிக் குடியிருப்புகளின் முதல் விற்பனை ஆவணங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங் களுக்கானஉரிமை ஒப்படைப்பு ஆவணங்கள், ரசீது ஆவணங்கள் ஆகியவை அடங்கும்.

பதிவு செய்த அன்றே ஆவணங்களைத் தாமதமின்றி வழங்குமாறு மாவட்டப் பதிவாளர்களுக்கு அறிவுறுத்தியிருக்கும் அமைச்சர், வருவாய் இழப்பைத் தடுத்து, மாநிலத்தின்நிதி இலக்குகளை எட்டுவதற்கு அனைத்து அதிகாரி களும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளார்.முன்னதாக, நீதிமன்ற வழக்குகளைக் கண்காணித்து, துறையின் சட்ட நடவடிக்கைகளை விரைவு படுத்த உதவும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலியின் பயன்பாட்டையும் அவர் தொடங்கி வைத்தார்.