சென்னை விரைவு செய்திகள்
24 May 2026, 2:16 am

பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு 7 ஆண்டு சிறை: மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

விழுப்புரம், மே 23- திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறிப் பெண்ணை ஏமாற்றிப் பாலியல் வன்புணர்வு செய்த வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சசிக்குமார் (36) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது பெண்ணும் 2017 முதல் காதலித்து வந்தனர். அப்போது அந்தப் பெண்ணைத் திருமணம் செய்வதாகக் கூறி சசிக்குமார் கட்டாயப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். பின்னர் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றியதால், பாதிக்கப்பட்ட பெண் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சசிக்குமாரைக் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி, சசிக்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். இதனைத் தொடர்ந்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அரசு ஐ.டி.ஐயில் சேர்க்கை

கடலூர், மே 23- கடலூர் மாவட்டத்திலுள்ள 7 அரசு மற்றும் 16 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) 2026-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இணைய வழிக் கலந்தாய்வு மூலம் நடை பெறவுள்ளது. தகுதியுள்ள மாணவ, மாணவிகள் https://skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வழியாக ஜூன் 3-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார். சேரும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள், சீருடை, பாடப்புத்தகங்கள் மற்றும் மாதந் தோறும் ரூ.750 உதவித்தொகை வழங்கப்படும். மேலும், புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களின்கீழ் தகுதி யுள்ளவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை, பிரபல நிறுவனங்களில் உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி (Internship) மற்றும் வேலை வாய்ப்பும் பெற்றுத்தரப்படும். கூடுதல் விவரங்களுக்கு 04142-290273 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

முன்னெச்சரிக்கையாக குற்றவாளிகள் கைது!

கள்ளக்குறிச்சி, மே 23- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கைப் பராமரிக்கும் பொருட்டு, எஸ்.பி. ஷானாஸ் உத்தரவின் பேரில் கடந்த இரண்டு நாட்களாகப் போலீஸார் தீவிரக் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.இதில், மாவட்டத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் 163 குற்றவாளிகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 76 பேரின் வீடுகளில் போலீஸார் நேரடிச் சோதனை நடத்தி னர். பொதுமக்களின் அமைதிக்குக் குந்தகம் விளைவிப்ப வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. எச்சரித்துள்ளார்.

வேளாண் திட்டங்களை முறைப்படி செயல்படுத்தக் கோரி விவசாயிகள் மனு

திருவண்ணாமலை, மே 22- விவசாயிகளுக்கு மானிய விலையில் மணிலா விதைகள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மானிய விலையில் மணிலா விதைகள் தடையின்றி வழங்கப்பட வேண்டும், தேவையற்ற திரவ உரங்களை (Liquid Fertilizers) விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் மற்றும் ‘பிரதமரின் கிசான்’ நிதித் தொகையைக் காலம் தாழ்த்தாமலும், பாரபட்சமின்றியும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பெரணமல்லூர் ஒன்றியத் தலைவர் பெருமாள், செயலாளர் முருகன், செயற்குழு உறுப்பினர் ராஜசேகரன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலாளர் பிரபாகரன் ஆகியோர் வெள்ளிக்கிழமையன்று (மே 22) பெரணமல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை நேரில் சந்தித்து இக்கோரிக்கை மனுவை அளித்தனர்.

குழந்தை திருமணத் தடுப்பு நடவடிக்கைகள் குழந்தைகள் நலத்துறைக்கு மாற்றம்

கள்ளக்குறிச்சி, மே 23- குழந்தை திருமண தடைச்சட்டம் 2006-இன் கீழ் புகார்கள் மற்றும் நடவடிக்கைகள், சமூக நலத்துறையிலிருந்து குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த பிப்ரவரி 26, 2026 முதல் இந்தத் துறை மாற்றம் நடை முறைக்கு வந்துள்ளது. எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கோ, 21 வயது நிறைவடையாத ஆணுக்கோ திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டால், பொதுமக்கள் மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்திலுள்ள (அறை எண் 602) ‘மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில்’ புகாரளிக்க லாம்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 04151-225600, 63691 07620 மற்றும் 24 மணி நேர இலவச உதவி எண்: 1098.