தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

6 May 2026, 9:05 pm
திருச்சி விரைவு செய்திகள்

தனியார் பள்ளிகளில் கோடைகால சிறப்பு வகுப்புகள் தலையீடு கோரி மாணவர்கள் வேண்டுகோள்

இராமநாதபுரம், மே 7- இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல தனியார் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடைகால சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது குறித்து மாணவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கோடைகால விடுமுறை காலத்திலும் வகுப்புகள் நடத்தப்படுவதால் மன உளைச்சல் ஏற்படுவதாகவும், சில பள்ளிகளில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லையெனவும் மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இவ்வகுப்பு களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது, விவகாரம் தொடர்பாக விசா ரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி கொண்டாட்டத்தில் தாக்குதல் மாமனார், மருமகன் காயம்; இரண்டு பேர் கைது

திருவில்லிபுத்தூர், மே 6- வத்திராயிருப்பு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட வ.புதுப்பட்டி ஆர்.சி. தெருவில், வெற்றி கொண்டாட்டத் தின் போது ஏற்பட்ட தகராறில் மாமனாரும் மருமகனும் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் வசிக்கும் ஆனந்த் மற்றும் அவரது மாமா இளையராஜா, வீட்டின் முன்பு இருந்தபோது, அதே தெருவைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பிரசாந்த் (டைசன்) மற்றும் இன்பத்தமிழன் ஆகியோர், கட்சியின் வெற்றியை கொண்டாடும் வகையில் சத்தமாக ஆரவாரம் செய்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அமைதியாக கொண்டாடுமாறு ஆனந்த் மற்றும் இளையராஜா அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, டைசன் மற்றும் இன்பத்தமிழன் இரு வரும் கோபத்தில் ஆனந்த் மற்றும் இளையராஜாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் இருவருக்கும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து ஆனந்த் அளித்த புகாரின் பேரில், வத்திரா யிருப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, டைசன் மற்றும் இன்பத்தமிழன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மின் கம்பங்கள் விழுந்து வீடுகள் சேதம்

நத்தம், மே 6- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாயன்று இரவு பலத்த மழை பெய்தது. இதில் நத்தம் அருகே அய்யாபட்டியைச் சேர்ந்த சித்திரையன் (40) என்பவரின் வீட்டின் முன்பு போடப்பட்டி ருந்த ஆஸ்பெட்டாஸ் சீட் மீது அப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக வீட்டின் அருகில் இருந்த மின்கம்பம் சாய்ந்து விழுந்தது. இதில் ஆஸ்பெட்டாஸ் சீட் முழு வதும் சேதமடைந்தது. மேலும் அந்த சமயத்தில் அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த நத்தம் கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தி னார். இதைப் போலவே வேலம்பட்டி பகுதியில் பெய்த மழையால் அப்பகுதியை சேர்ந்த தினகரன்(30) என்பவரின் மாட்டுக் கொட்டகையில் போடப்பட்டிருந்த செட்டிலும் மின்கம்பம் சாய்ந்தது. இதில் செட் சேதமடைந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த மின்வாரியத்தினர் சாய்ந்த மின் கம்பங்களை அப்புறப்படுத்தினர்.

தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை; 2 பேர் கைது

திருவில்லிபுத்தூர், மே 6- திருவில்லிபுத்தூர் நகரில் தடைசெய்யப்பட்ட புகை யிலை பொருட்கள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்து, பெருமளவு பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ஸ்ரீராம் லாட்ஜ் அருகே, காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முருகராஜ் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தார். அப்போது, மதுரை விரகனூரைச் சேர்ந்த ஜெய சீலன் மற்றும் திருவில்லிபுத்தூர் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் ஆகியோர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ப னைக்கு வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்த னர். மேலும், அவர்களிடமிருந்து சுமார் 15.537 கிலோ எடை யுள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டன. பின்னர், கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

பனங்கள் விற்பனை: 2 பேர் மீது வழக்கு

திருவில்லிபுத்தூர், மே 6- திருவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பனங்கள் விற்பனை செய்த இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேமலை அம்மன் கோவில் அருகே காவல்நிலைய சார்பு ஆய்வாளர் அருண்பாண்டியன் ரோந்து சென்ற போது, மம்சாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் அரசு தடை விதித்த பனங்கள்ளை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக 4 லிட்டர் பனங்கள்ளை பறிமுதல் செய்து அழித்த போலீ சார், அவர்மீது வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல், கருக்குத்தோப்பு கலிங்காடி கருப்பசாமி கோவில் அருகே சார்பு ஆய்வாளர் நாகராஜ் ரோந்து சென்றபோது, தோப்பூரைச் சேர்ந்த இளங்கோவன் என்ப வர் 2 லிட்டர் பனங்கள்ளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பனங்கள்ளையும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. அவர்மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

போடி அருகே சூறாவளி காற்று: ராட்சத மரங்கள் விழுந்து மின்கம்பங்கள் சேதம்

தேனி, மே 6- போடி அருகே முந்தல் சாலையில் சூறாவளி காற்று வீசியதில் ராட்சத மரங்கள் விழுந்து மின்கம்பங்கள் சேதமடைந்தன. போடி அருகே 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மேலப்பரவு மலை கிராமம். இங்கு மலைவாழ் பழங்குடியினர் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த மலை வாழ் மக்கள் ஆடு, மாடுகள் மேய்ப்பதும், விவசாயம் சார்ந்த கூலி வேலையை தொழிலாக செய்து வருகின்றனர். தற்போது கடுமையான கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென இப்பகுதியில் பலத்த சூறாவளிக்காற்று வீசியது. இப்பகுதியில் சாலையோரத்தில் இருந்த 80 அடி உயரம் கொண்ட நிறைய இலவ மரங்கள் சாய்ந்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் விழுந்தன. இதனால் மின் கம்பங்கள் பலத்த சேதம் அடைந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது. வீடுகளின் மேற்பகுதியில் விழுந்ததால் மேற்கூரைகள் சேதமடைந்த நிலையிலும் பாதிப்பு ஏற்படாமல் குடியிருப்பவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மின்வாரிய ஊழியர்கள், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மின் கம்பம் உடைந்து கம்பிகள் கீழே விழுந்த நிலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

ஹரிஹரன் மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரிக்கை

மதுரை, மே 6- ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தாக கூறப்படும் ஹரிஹரன் மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி தாக்கல் செய் யப்பட்ட பொதுநல வழக்கில், புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் பதில் மனு தாக் கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்தி ரக் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முரு கானந்தம் தாக்கல் செய்த மனுவில், பட்டிய லின சமூகத்தைச் சேர்ந்த ஹரிஹரன் மற்றும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த தேவி ஆகி யோர் காதலித்து வந்ததாக குறிப்பிடப்பட் டுள்ளது. இந்த உறவுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஹரிஹரன் ஒரு குவாரி பகுதி யில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் கூறப் பட்டுள்ளது. இந்த சம்பவம் ஆணவப் படுகொலை என பதிவு செய்யப்படவில்லை என்றும், பெண் வீட்டாரே ஹரிஹரனை கொலை செய்ததாகவும் மனுவில் குற்றம்சாட்டப் பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட குடும் பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் குமரப்பன் அமர்வில் விசார ணைக்கு வந்தது. வழக்கை பரிசீலித்த நீதி பதிகள், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி யர் மற்றும் காவல்துறை கண்காணிப்பா ளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட னர். மேலும், வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இடைக்கால தடை விதித்து, விசாரணையை ஒத்திவைத்தனர்.

பெட்டிக்கடைக்குள் சரக்கு வேன் பாய்ந்து விபத்து

ஒட்டன்சத்திரம், மே 6- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஒத்தப்பட்டியில், கட்டுப் பாட்டை இழந்த சரக்கு வேன் பெட்டிக் கடைக்குள் புகுந்து விபத்து ஏற்படுத்தி யதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். ஒத்தப்பட்டியைச் சேர்ந்த மருதா யம்மாள் (82) என்பவர் சாலையோரத்தில் சிறிய பெட்டிக்கடை வைத்து வாழ்க்கை நடத்தி வந்தார். புதன்கிழமை அவர் தனது கடையில் திருமக்கால் (70) என்பவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப் போது, கடை முன்பு பால்காரர் வேல்முரு கன் (42) நின்று கொண்டிருந்தார். இந்நிலையில், அய்யலூரிலிருந்து எரி யோட்டுக்குச் சென்ற சரக்கு வேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறு மாறாக சென்று, எதிர்பாராத விதமாக பெட்டிக்கடைக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் மருதாயம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருமக்கால் மற்றும் வேல்முருகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அருகிலிருந்தவர்கள் அவர் களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி னர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மலையரசி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மரு தாயம்மாள் உடலை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.