தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

21 May 2026, 10:47 pm
திருச்சி விரைவு செய்திகள்

மின்சாதனக் கடையில் பணம் செலுத்தாமல் தப்பிஓடிய கும்பல்

நாகர்கோவில்,மே 21- கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே சைமன் காலணி பகுதியில் உள்ள லியா ஃப்ளோடெக் என்ற மின்சாதன கடையில் கடந்த மே 1 ஆம் தேதி பைக்கில் வந்த இரணடு வாலிபர்கள் சில மின்சாதன பொருட்களை வாங்கினர். ஜி-பே மூலம் பணம் அனுப்பு வதாகக்கூறி, பைக்கில் ஏறி தப்பிச்சென்றனர். இதே போல் கடந்த செவ்வாய்க்கிழமை தக்கலை பகுதி யில் மூன் எலட்ரிக்ஸ் என்ற கடையிலும் இதே வாலிபர்கள் பணம் செலுத்தாமல் பைக்கில் ஏறி தப்பிச்சென்றனர். இத்தகைய மோசடி தொடராமல் இருக்க காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழங்குடியினருக்கான மருத்துவ சேவைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்திடுக! அலுவலருக்கு ஆட்சியர் உத்தரவு

நாகர்கோவில்,மே 21- கன்னியாகுமரி மாவட்ட திருவட்டார் வட்டத்துக்குட் பட்ட பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் குற்றியாறு பழங்குடியினர் நடமாடும் மருத்துவ அலகினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா மே 21 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டத்துக்குட்பட்ட பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை ஆய்வு மேற் கொண்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறியப்பட்டது. வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வந்த நோயா ளிகளிடம் வழங்கப்படும் சிகிச்சைகள் முறையாக வழங்கப் படுகிறதா என கேட்டறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஆய்வகத்தை பார்வையிட்டு, நோயாளிகளுக்கு பரிசோ தனை முடிவுகள் காலதாமதமின்றி வழங்கப்படுகிறதா பணியாளரிடம் கேட்டறியப்பட்டது. பேச்சிப்பாறை அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவையான நடவ டிக்கைகளை மேற்கொள்ளுமாறு வட்டார மருத்துவ அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது. குற்றியாறு பகுதியில் செயல்பட்டு வரும் பழங்குடி யினர் நடமாடும் மருத்துவ அலகு (TRIBAL MOBILE MEDICAL UNIT) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்க ளுக்கு மருத்துவக் குழுவினரால் வழங்கப்பட்டு வரும் சுகாதார சேவைகள் குறித்து கேட்டறியப்பட்டது. பழங்குடி யின மக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகளை மேலும் மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட சுகாதார அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது என்று தெரிவித்தார். இந்த ஆய்வில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.நமச்சிவாயம், குட்டக்குழி வட்டார மருத்துவ அலுவலர் மரு.அருண் சந்தோஷ், மருத்துவர்கள். செவிலியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடியில் பெண் வெட்டிக் கொலை: 2 பேர் கைது

தூத்துக்குடி, மே 21- தூத்துக்குடியில் பெண்ணை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி அண்ணா நகர், 12-ஆவது தெரு, மங்களபுரம் பகுதியைச் சேர்ந்த பூபால் ராஜா என்பவரது மனைவி அமுதா (50). இவர்களது மகன் அருண்குமார், மனைவி சரஸ்வதி (29) மற்றும் குழந்தைகளுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். அருண்குமார் மது போதையில் அடிக்கடி குடும்பத்தில் தகராறு செய்துள்ளார். கடந்த செவ்வாயன்று இரவு அருண்குமாருக்கும், அவரது மனைவி சரஸ்வதிக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கு வந்த அமுதா தனது மகனான அருண்குமாருக்கு ஆதரவாகப் பேசியதாகத் தெரிகிறது. இதனால் மருமகள் தரப்பிற்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, புதனன்று அமுதா வழக்கம் போல் தனது மளிகைக் கடையில் வியாபாரப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அமுதாவைச் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் பலத்த காயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்த அமுதாவை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் அருண் குமாரின் மனைவி சரஸ்வதியின் சகோதரரான சங்கர் (32) என்பவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி, சங்கர் மற்றும் அவரது நண்பர் மதன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலையோரங்களில் கழிவுகளை கொட்டுவதை தடுக்க அருமனை பேரூராட்சி நடவடிக்கை

அருமனை, மே 21- கன்னியாகுமரி மாவட்டம் அரு மனை பேரூராட்சி பகுதியில் சாலை யோரங்களில் கழிவுப்பொருட்க ளை கொட்டுவதை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. குமரி மாவட்டத்தில் அனைத்து சாலையோரங்களிலும் துர்நாற்றத் துடன் வீசக்கூடிய கழிவுப் பொருட்க ளை கொட்டிச் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் சுகாதாரச்சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள் ளது. இந்நிலையில் குழித்துறை- ஆலஞ்சோலை நெடுஞ்சாலை யில் பல்வேறு பகுதிகளில் கழி வுப்பொருட்களை கொட்டிச் செல்கின்றனர். இதனால் பொது மக்கள் நடமாட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அருமனை பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட படப்பச்சை பகுதி யில் ஆள் நடமாட்டம் குறைந்தி ருக்கும் பகுதியாகும் . இப்பகுதி யானது திற்பரப்பு நீர்வீழ்ச்சிக்கு மிக அருகில் உள்ள பகுதிகளாகும் .இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இச்சாலை வழியாக சென்று வருகின்றனர். இப்பகுதி யில் இரவு நேரங்களிலும் அதி காலை வேளையிலும் கழிவுப் பொருட்களை கொட்டிச் சென்று விடுகிறார்கள். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. இதைத் தொடர்ந்து அரு மனை பேரூராட்சி நிர்வாகம் சாலையோரங்களில் செடிகளை நட்டும், மரக்கன்றுகள் நட்டும் பராமரித்து வந்தனர். அப்பகுதி யில் சாலையின் இரு பக்கங்க ளிலும் தடுப்பு வலைகள் அமைத்து கழிவு பொருட்கள் கொட்டாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. அப்பகுதிகளில் குப்பைகள் கொட்டுவது கழிவு பொருட்களை கொட்டும் நிலைமை ஏற்பட்டால் அவர்கள் மீது கடுமையான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி அரசு மருத்துவமனையில் நோயாளி படுக்கையில் எலிகள் வைரலாகும் வீடியோவால்

அதிர்ச்சி தேனி, மே 21- தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் படுக்கையில் எலிகள் சாதாரணமாக திரி வது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரு கிறது. தேனி அருகே க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தேனி, கேரளா உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான புற நோயாளி கள் வந்து செல்கின்றனர்.மேலும் ஆயிரக்கணக்கான உள் நோயாளிகளும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சையும் எடுத்துக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையில் 604 வார்டில் எலிகள் சர்வ சாதாரணமாக சுற்றித் திரிகிறது. உணவு பொருட்களை மட்டும் சாப்பிடுவது இல்லை. நோயாளி களின் காலையும் கடிக்கிறது. இதனால் நோயாளி களுக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்படு வதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கிறார்கள். உள் நோயாளிகள் தங்கும் வார்டு பகுதியில் போதிய சுகாதாரமின்றி இருப்பதால் இதுபோன்று எலிகள் தொல்லை இருப்பதாகவும், இரவிலும் எலிகளின் கூச்சல் சத்தத்தால் தூங்க முடியாமல் அவதி அடைந்து வருவ தாக நோயாளிகள் சொல்கிறார்கள். உள் நோயாளிகள் பிரிவில் சிகிச்சை எடுக்கும் நோயாளி ஒருவர், எலிகள் சுற்றி திரியும் வீடியோ கட்சி யினை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக எலிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

பத்திரப் பதிவு செய்ய ரூ.28 லட்சம் லஞ்சம் பதிவாளர், ஏஜெண்ட் கைது

இராமநாதபுரம், மே 21- இராமநாதபுரத்தில் நில பத்திர பதிவு செய்வதற்காக ரூ.28 லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட பதிவா ளர் ராமநாதன் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல் பட்ட ஏஜெண்ட் அயூப்கான் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.3 லட் சம் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இராமநாதபுரம் நகரின் மையப் பகுதியில் அமைந் துள்ள 2.44 ஏக்கர் நிலத்தை பதிவு செய்ய ஒருவர் வெளிப் பட்டணம் பத்திர பதிவு அலுவலகத்தை அணுகியதாக கூறப்படுகிறது. அப்போது, பத்திரத்தை பதிவு செய்ய ரூ.50 லட்சம் லஞ்சம் வழங்க வேண்டும் என பதிவாளர் ராமநாதன் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் முதல் கட்டமாக ஏஜண்ட் அயூப்கான் மூலம் ரூ. 25 லட்சம் பெறப்பட்டதாகவும், மீதமுள்ள தொகையை வழங்கினால் மட்டுமே பத்திரப் பதிவு செய்யப்படும் என கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நபர் லஞ்ச ஒழிப்புத் துறை யினரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் அதிகாரிகள் தீட்டிய திட்டத்தின் அடிப்படையில், மீதமுள்ள ரூ.3 லட்சத்தை பதிவாளர் ராமநாதனிடம் வழங்கும் போது, மறைந்து கண்காணித்து வந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். இந்த வழக்கில் உடந்தையாக இருந்த ஏஜெண்ட் அயூப்கானையும் கைது செய்துள்ள அதிகாரிகள், மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பார் உரிமையாளர்கள் தவெகவினர் மீது குற்றச்சாட்டு

திருவில்லிபுத்தூர், மே 21- திருவில்லிபுத்தூர் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில், ஏலம் எடுத்து பார் நடத்தி வரும் நபர்களிடம் சில தவெக நிர்வாகிகள் மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. “நாங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டோம்; இனிமேல் கடைகளை நாங்கள்தான் நடத்துவோம்” என கூறி, தற்போது பார் நடத்திவரும் நபர்களை வெளியேறுமாறு வற்புறுத்திய தாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சில நிர்வாகிகள், “எங்களுக்கு ஏதாவது கொடுங்கள்” என பணம் கேட்டு அழுத்தம் கொடுத்த தாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பார் ஏலம் எடுத்து நடத்திவரும் பரமன் என்பவர் கூறுகையில், விருதுநகர் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் மூலம் முறையாக ஏலம் எடுத்து தான் பார்களை நடத்தி வருவதாக தெரிவித்தார். தற்போது சில தவெக நிர்வாகிகள் கடையை காலி செய்ய சொல்லி மிரட்டு வதோடு, மாமூல் கேட்கும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் டாஸ்மாக் நிர்வாகமும் மாவட்ட அதிகாரிகளும் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோடை கால நெரிசல் பெங்களூரு-தென்காசி-செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் தென்மாவட்ட பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

மதுரை, மே 21- கோடைகால பயணிகள் நெரிசலை சமா ளிக்கும் வகையில் பெங்களூரு கண்டோன் மெண்ட் – தென்காசி – செங்கோட்டை இடையே சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென் மேற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தென் மேற்கு ரயில்வே ஹூப்ளி மண்டல தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி டாக்டர் மஞ்சுநாத் கன மாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பயணிகள் வசதிக்காக “டிரெயின் ஆன் டிமாண்ட்” அடிப்படையில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, ரயில் எண் 06513 பெங்களூரு கண்டோன்மெண்ட் – தென்காசி ஒருவழி சிறப்பு விரைவு ரயில், வரும் 24.5.2026 ஞாயிற்றுக்கிழமை இரவு 10. 20 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறு நாள் மதியம் 1 மணிக்கு தென்காசி சென்ற டையும். மறுமார்க்கத்தில், ரயில் எண் 06514 செங்கோட்டை – பெங்களூரு கண்டோன் மெண்ட் சிறப்பு விரைவு ரயில், 25.5.2026 திங்கட்கிழமை இரவு 11 மணிக்கு செங் கோட்டையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன் மெண்ட் சென்றடையும். இந்த சிறப்பு ரயில், கர்மேலாரம், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக் கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில், கடை யநல்லூர் மற்றும் தென்காசி (திரும்பும் மார்க்கத்தில்) உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். மேலும், இந்த சிறப்பு ரயிலில் ஒரு ஏசி மூன்றடுக்குப் பெட்டி, 5 தூங்கும் வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மற்றும் 2 சரக்கு மற்றும் பிரேக் வேன் இணைந்த இரண்டாம் வகுப்பு பெட்டி கள் உள்ளிட்ட மொத்தம் 20 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான அரிசியில் முறைகேடு நியாய விலைக்கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பழனி, மே 21- மாற்றுத்திறனாளிகளுக்கான அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண் டிய அரிசி முறைகேடாக களவாடப் பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, சம் பந்தப்பட்ட நியாய விலைக்கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்று திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் அமைப்பு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தில்லி உயர்நீதிமன்ற உத்தர வின் அடிப்படையில், மாற்றுத்திற னாளிகள் உள்ள குடும்பங்களை வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களாக கருதி, உணவு பாது காப்பு சட்டத்தின் கீழ் ஏஏஒய் திட்டத் தில் 35 கிலோ அரிசி வழங்க வேண் டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், திண்டுக் கல் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளிடமி ருந்து மனுக்கள் பெற்று, அவர் களது குடும்ப அட்டைகளை ஏஏஒய் கார்டுகளாக மாற்றித் தர வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் அமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து மனுக்கள் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பழனி அடி வாரம் பாரதி நகரைச் சேர்ந்த பக்க வாதம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திற னாளி ஐயப்பனின் குடும்ப அட்டை ஒன்றரை ஆண்டுகளாக ஏஏஒய் கார் டாக மாற்றப்படவில்லை என்றும், மாதந்தோறும் 16 கிலோ அரிசி மட் டுமே வழங்கப்பட்டு வந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித் துள்ளனர். ஆனால், இணையதளத்தில் குடும்ப அட்டையை சரிபார்த்த போது, கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே அந்த அட்டை ஏஏஒய் கார் டாக மாற்றப்பட்டிருப்பது தெரிய வந்ததாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, பழனி அடிவாரம் இட்டேரி சாலை சப்பாணி காளி யம்மன் கோவில் அருகே உள்ள நியாய விலைக்கடை ஊழியர்கள், ஏஏஒய் கார்டாக மாற்றப்பட்ட தக வலை மறைத்து வைத்து, தொடர்ந்து குறைவான அளவு அரிசி வழங்கிய தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் “இன்னும் ஏஏஒய் கார்டாக மாறவில்லை” என்று கூறி மாற்றுத் திறனாளியின் குடும் பத்தினரை ஏமாற்றி வந்ததுடன், மாதந்தோறும் வழங்கப்பட வேண் டிய 20 கிலோ அரிசி முறைகேடாக களவாடப்பட்டுள்ளதாக தெரிவித் துள்ளது. இதுகுறித்து சங்க நகரத் தலை வர் ஆர்.ஜெயக்குமார் மற்றும் நகரச் செயலாளர் பி.தங்கவேல் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாற்றுத் திறனாளிகளுக்குச் சேர வேண்டிய உணவுப் பொருட்களை முறைகேடாக பறிப்பது மனிதநேய மற்ற செயல். எனவே மாவட்ட ஆட்சி யரும், மாவட்ட வழங்கல் அலுவல ரும் உடனடியாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.