தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

yesterday
சென்னை விரைவு செய்திகள்

பழங்குடி மக்களுக்குச் சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தல்

கடலூர், ஜூன் 21- பெண்ணாடத்தில் பழங்குடி மக்கள் நலச் சங்க திட்டக்குடி வட்ட மாநாடு மாவட்டத் துணைத் தலைவர் சத்யராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் துணைச் செயலாளர் ரமேஷ் வரவேற்க, மாவட்டத் தலைவர் ஆழ்வார், சிபிஎம் வட்டச் செய லாளர் வி.அன்பழகன், மாவட்டச் செயலாளர் என்.எஸ்.அசோகன், மற்றும் மாவட்டச் சிறப்புத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு ஆகி யோர் உரையாற்றினர். இம்மாநாட்டில் வட்டத் தலைவராக மாய வேல், செயலாளராக ரமேஷ், பொருளாள ராக தனவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பழங்குடி மக்கள் அனைவருக்கும் சாதி சான்றிதழ், மனை பட்டா வழங்கி, பிரதம மந்திரியின் ஜென்மண் திட்டத்தில் வீடு கட்டிக் தர வேண்டும்; நல வாரியம் அமைப்ப தோடு, குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பு வாகன ஓட்டிகள் அவதி!

ராணிப்பேட்டை, ஜூன் 21- ராணிப்பேட்டை அடுத்த மேல்விஷாரம் குளோபல் பொறியியல் கல்லூரிக்கு பின்புறம் உள்ள பழைய இரும்பு பொருட் கள் வாங்கும் கடையில் , தொடர்ந்து பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் தீ வைத்து எரிக்கப்படுவதால் கடுமை யான சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நச்சுப் புகையின் காரணமாக அப்பகுதி பொதுமக்களுக்கும், அருகில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கும் கடுமை யான மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்படு கின்றன. மேலும், இந்த அடர்ந்த கரும்புகை அருகில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை மறைக்கும் அளவுக்குப் பரவுவதால், எதிரே வரும் வாகனங்கள் சரிவரத் தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகியுள் ளது. தொடர்ந்து விதிகளை மீறி கழிவுகளை எரிக்கும் இந்தக் கடை மீது மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுத்துப் புகை மாசுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துக: ஓய்வூதியர்கள் சங்கப் பேரவையில் வலியுறுத்தல்

திருவள்ளூர், ஜூன் 21- தமிழ்நாடு அனைத்து துறை அரசு ஓய்வூ தியர்கள் சங்கத்தின் ஆர்.கே. பேட்டை வட்டக் கிளையின் வட்டப் பேரவைக் கூட்டம் ஞாயிற் ்றுக்கிழமை வட்டத் தலைவர் சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் துணைத் தலைவர் கே.வி.மணி வரவேற்புரை ஆற்ற, மாவட்டத் துணைத் தலைவர் மு.சந்திரசேகர் கூட்டத் தைத் துவக்கி வைத்தார். மாவட்டச் செய லாளர் ஆர்.ஜெயராமன் வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து, வட்டச் செயலாளர் இ.ஸ்ரீனி வாசன் வேலை அறிக்கையை வாசிக்க, பொருளாளர் எல்.கோவிந்தசாமி வரவு செலவு கணக்கைச் சமர்ப்பித்தார். மாவட்டத் தலைவர் கோ.இளங்கோவன் சங்கக் கொடியேற்றி நிறைவுரையாற்றினார். இறுதியாக மாவட்டத் துணைத் தலைவர் வாசுதேவசிங் நன்றி கூறினார். தீர்மானம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடி யாக அமல்படுத்த வேண்டும்.70 வயது நிரம்பிய ஓய்வூதியதாரர்களுக்கு 10 விழுக் காடும், 65 வயது நிரம்பிய ஓய்வூதிய தாரர்களுக்கு 5 விழுக்காடும் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தி.நகரில் சிக்னல் பழுதானதால் போக்குவரத்து நெரிசல்

சென்னை, ஜூன் 21- சென்னை தெற்கு உஸ்மான் சாலை வழி யாக சி.ஐ.டி நகர் மற்றும் நந்தனம் செல்லும் வாகன ஓட்டிகள், டி.நகர் இரும்பு மேம்பால த்தின் கீழ் உள்ள தென்மேற்கு போக் சாலை சந்திப்பில் தினசரி கடுமையான போக்கு வரத்து நெரிசலால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தெற்கு உஸ்மான் சாலை, தென்மேற்கு போக் சாலை, புதிய போக் சாலை மற்றும் சி.ஐ.டி 1-வது பிரதான சாலை ஆகிய நான்கு திசைகளிலிருந்தும் வாக னங்கள் வருவதால் இந்தச் சந்திப்பு எப்போதும் ஆபத்தான பகுதியாக மாறி யுள்ளதுடன், பழுதடைந்து பல ஆண்டுகளாகச் செயல்படாமல் இருக்கும் போக்குவரத்து சிக்னல்களால் வாகனங்கள் தாறுமாறாகச் சென்று விபத்துகளும் ஏற்படுகின்றன. மேலும், அப்பகுதியில் உள்ள வீட்டுவசதி வாரிய அலுவலகம் அருகே முறையான பேருந்து நிறுத்தம் இல்லாததால், பேருந்துகள் சாலையின் நடுவிலேயே நிறுத்தப்பட்டு நெரிசலை மேலும் அதிகரிக்கின்றன. இதுகுறித்து போக்கு வரத்து புலனாய்வுப் அதிகாரி ஒருவர் கூறு கையில், இப்பகுதியில் விபத்துகளைத் தடுக்கத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப் படும் என்றும், இந்தச் சிக்கல்கள் குறித்து போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் பிரிவுக்குத் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் கூறி யுள்ளார்.

நீலமங்கலம் ரேசன் அரிசியில் பூச்சி, வண்டு

கள்ளக்குறிச்சி, ஜூன் 21- கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் ஊராட்சியில் உள்ள நியாய விலைக் கடை எண் 2-ல் பூச்சி மற்றும் வண்டுகள் நிறைந்த தரமற்ற அரிசி பொதுமக்களுக்கு விநி யோகம் செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குடும்பத்தின் அடிப்படை உணவாக இருக்கும் அரிசி, இப்படித் தர மற்று வழங்கப்படுவதால் மக்களின் உடல் நலத்திற்குப் பாதிப்பு ஏற்படுமோ என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பலமுறை கடை ஊழியர் களிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை எனப் பொது மக்கள் புகார் கூறுகின்றனர். எனவே, குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரி கள் உடனடியாக இந்த நியாய விலைக் கடை யில் ஆய்வு மேற்கொண்டு, குறைபாடு களைச் சரிசெய்து தரமான அரிசி விநி யோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.