தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ்நாட்டுக்கு ரூ.4,466 கோடி வரிப் பகிர்வு விடுவிப்பு நிலுவைத் தொகையையும் வழங்க வலியுறுத்தல்

1 Nov 2026, 9:15 pm
தமிழ்நாட்டுக்கு ரூ.4,466 கோடி வரிப் பகிர்வு விடுவிப்பு  நிலுவைத் தொகையையும் வழங்க வலியுறுத்தல்

தமிழ்நாட்டுக்கு ரூ.4,466 கோடி வரிப் பகிர்வு விடுவிப்பு நிலுவைத் தொகையையும் வழங்க வலியுறுத்தல்

சென்னை, நவ.1 -மாநிலங்களின் மூலதனச் செலவுகளை ஊக்குவிக்கவும் பண்டிகைக் காலத் தேவைகளை நிறைவு செய்யவும், நடப்பு நிதியாண்டுக்கான கூடுதல் வரிப் பகிர்வுத் தொகையை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. இதன்படி 28 மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.1,09,019 கோடி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

மாநில வாரி விவரம்

ஒன்றிய நிதி அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, உத்தரப் பிரதேசத்துக்கு அதிகபட்சமாக ரூ.19,208 கோடியும், பீகாருக்கு ரூ.10,845 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.தென் மாநிலங்களில் ஆந்திராவுக்கு ரூ.4,597 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.4,504 கோடி, தமிழ்நாட்

டுக்கு ரூ.4,466 கோடி, கேரளத்திற்கு ரூ.2,597 கோடி, தெலுங்கானாவுக்கு ரூ.2,370 கோடி கிடைத்துள்ளது.

தொடரும் நிலுவைகள்

இந்த நிதி தற்காலிக நிவாரணமே என்றும், பல்வேறு நிதியுதவித் திட்டங்களின் கீழ் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய பல்லாயிரம் கோடி ரூபாய் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. குறிப்பாக, ‘சமக்ர சிக்ஷா அபியான்’ திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய ரூ.5,110 கோடி நிலுவையில் உள்ளது. இதை நிபந்தனையின்றி உடனே விடுவிக்க வேண்டும் என்று, சென்னை வந்த பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வர வேண்டிய உணவு மானியப் பாக்கி சுமார் ரூ.2,670 கோடி என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன. சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்துக்கான நிதிப்பங்களிப்பு, கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கான ஒப்புதல், ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவை ஆகியவையும் நிலுவையில் உள்ளன.

வலுக்கும் கோரிக்கை

நிதி ஆணையத்தின் தற்போதைய கணக்கீட்டுச் சூத்திரங்களால், அதிக வரி வசூலிக்கும் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டுக்குக் குறைவான வரிப் பகிர்வே கிடைப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். உள்கட்டமைப்புப் பணிகளைத் தடையின்றி மேற்கொள்ளவும் மாநிலத்தின் கடன் சுமையைக் குறைக்கவும், சட்டப்பூர்வமாக வர வேண்டிய அனைத்து நிலுவைகளையும் விரைந்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.