தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புயலால் பாதித்த இலங்கை மக்களுக்கு உதவ தமிழ்நாடு தயார்: முதலமைச்சர்

30 Nov 2025, 4:29 pm
புயலால் பாதித்த இலங்கை மக்களுக்கு உதவ தமிழ்நாடு தயார்: முதலமைச்சர்
<p><strong>புயலால் பாதித்த இலங்கை மக்களுக்கு உதவ தமிழ்நாடு தயார்: முதலமைச்சர்</strong></p> <p>சென்னை, நவ.30 - டிட்வா புயல் காரணமாக பேரழிவை &nbsp;சந்தித்துள்ள அண்டை நாடான இலங்கை மக்களுக்கு உதவிக் கரம் &nbsp;நீட்டத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ள தாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், டிட்வா புயல் காரண மாக நமது அண்டை நாடான இலங்கை &nbsp;பேரழிவைச் சந்தித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தும், பல இடங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளா கியும் இலங்கை மக்கள் அவதியுறு கின்றனர். இந்த இயற்கைச் சீற்றத்தில் &nbsp;இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங் கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, இலங்கை மக்களின் இப்பெருந்துயரில் தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் பங்கெடுப்பதாக கூறியுள்ளார். இலங்கையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளை மீட்க அயலகத் தமிழர் நலன் மற்றும் &nbsp;மறுவாழ்வுத் துறை சார்பில் &nbsp;நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஞாயிறன்று காலை 11.05 மணி யளவில் முதற்கட்டமாக 177 பேர் தமிழ் நாட்டிற்குத் திரும்ப அழைத்து வரப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவர்களில் ஆண்கள் 113 பேர், பெண்கள் 60 பேர், குழந்தைகள் 4 பேர் &nbsp;உள்ளனர். டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப் பட்டுள்ள இலங்கை மக்களுக்கு ஒன்றிய அரசின் மூலம் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட வற்றைத் தந்து, அவர்கள் மீண்டெழுந்திட &nbsp;உதவிக்கரம் நீட்டிடத் தமிழ்நாடு அரசு தயாராக இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். &nbsp;இதற்காக ஒன்றிய அரசுடன் இணைந்து செயல்பட அதிகாரிகள் குழுவை அமைத்திட தலைமைச் செய லாளருக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.