தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொழிலுக்கு உகந்த மாநிலங்கள் பட்டியல்: 3 ஆவது இடத்தில் தமிழ்நாடு

18 Jul 2026, 9:41 pm
தொழிலுக்கு உகந்த மாநிலங்கள் பட்டியல்: 3 ஆவது இடத்தில் தமிழ்நாடு
<p><strong>தொழிலுக்கு உகந்த மாநிலங்கள் பட்டியல்: 3 ஆவது இடத்தில் தமிழ்நாடு</strong></p><p>சென்னை, ஜூலை 18 - தொழிலுக்கு உகந்த மாநிலங்கள் என நிதி ஆயோக் வெளியிட்ட பட்டியலில் குஜராத் முதலி டம் பிடித்துள்ளது. தமிழகம் 3 ஆவது இடத்தில் உள்ளது. உள்கட்டமைப்பு திறன், திறமையான மனித வள ஆற்றல் அளவு, அமைப்பு திறன், நிதி ஆரோக்கியம், சுற்றுச்சூழல் மீள்தன்மை மற்றும் ஒழுங்கு ஆகியவற்றின் அடிப்படையில் முதலீடு களை நீண்ட காலம் ஈர்க்கும் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் குஜராத் மாநிலம் 56.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது. சிறந்த துறைமுக உள்கட்டமைப்பு, மின் விநியோகம், வலுவான தொழில்துறை அமைப்பு தொழிலுக் கான சூழ்நிலை ஆகியன அம்மாநிலத்திற்கு வலு சேர்த்துள்ளன. மகாராஷ்டிரா 53.7 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்தில் உள்ளது; நிதி சந்தை, வலுவான தனி யார் பங்களிப்பு, புதுமை கண்டுபிடிப்புக்கான உள்கட்டமைப்புகள் அங்கு உள்ளன. தமிழகம் 53.3 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்தைப் பிடித்து உள்ளது. உற்பத்தி தளம், ஏற்றுமதியில் சிறந்த பணி, சிறந்த துறைமுக கட்டமைப்பு மற்றும் முத லீட்டை செயல்பாட்டுக்குக் கொண்டு வருதல் ஆகியவை தமிழகத்தில் வலுவாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒடிசா 5 ஆவது இடத்திலும், மத்தியப் பிரதே சம் 7 ஆவது இடத்திலும் உள்ளன. உத்தரப் பிரதேசம் 19 ஆவது இடத்தையும், ஜார்க்கண்ட், பீகார் ஆகிய மாநிலங்கள் முறையே 25, 26 ஆவது இடங்களையும் பிடித்துள்ளன. மலை சார்ந்த மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உத்தரகண்ட் முதலிடத்திலும், அசாம், ஹிமாச்சலப் பிரதேசம் அடுத்த இடங்களிலும் உள்ளன. யூனியன் பிர தேசங்களில் கோவா முன்னணியிலும், தில்லி, சண்டிகர் அடுத்த இடங்களிலும் உள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.