தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு முதலிடம்: உதயநிதி பெருமிதம்

30 Dec 2025, 5:57 pm
விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு முதலிடம்: உதயநிதி பெருமிதம்
<p><strong>விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு முதலிடம்: உதயநிதி பெருமிதம்</strong></p> <p>ஈரோடு, டிச.30- விளையாட்டுத்துறையில் இந் திய அளவில் தமிழ்நாடு முதலிடத் தில் உள்ளதென, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்து டன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே அமைந்துள்ள அரசு பொறி யியல் கல்லூரியில் செவ்வாயன்று &nbsp;நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டா லின் கலந்து கொண்டு, கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இதன்பின் அவர் பேசு கையில், இந்தியாவிலேயே தமிழ் நாடு பாதுகாப்பான, முன்னேறிய மாநிலமாக சிறப்பாக உள்ளது. பல் வேறு துறைகளில் குறிப்பாக, விளையாட்டுத் துறையில் இந்தியா வில் தலைசிறந்த நம்பர் 1 மாநில மாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு நம்முடைய அரசின் முயற்சி மட்டுமே காரணமல்ல. தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள், அவர்களு டைய பெற்றோர்கள், பயிற்சியாளர் கள் உள்ளிட்ட அத்தனை பேருமே காரணமாவார்கள். அரசின் முயற்சி யும், விளையாட்டு வீரர்களின் பயிற் சியும் தான் தமிழ்நாட்டை ஏராள மான வீரர்களையும், வீராங்கனை களையும் உருவாக்கிக் கொண்டுள் ளோம். 14 மாவட்டங்களில் இருக் கும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களுக்கு 6 ஆயிரம் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய கிட் போய் சேர இருக்கிறது. எல்லா ரும் விளையாட்டு மைதானத்திற்கு வரவேண்டும். விளையாட வேண் டும். படிப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு உடற்பயிற்சி முக் கியம். அப்போது தான் உடலும், உள் ளமும் வலிமையுடன் இருக்கும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி யிலும் ஒரு மினி ஸ்டேடியம் தயா ராகி வருகிறது. நம்முடைய அரசு பொறுப்பேற்றது முதல் ஏராளமான சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகள் நடத்தியிருக்கிறோம். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று வருபவர்களுக்கு அரசு ஊக்கத் தொகை கொடுக்கிறது. ஆனால் போட்டிகளில் கலந்து &nbsp;கொள்வதற்கு முன்பு அவர்களுக்கு பயிற்சி, உணவு, விமான டிக்கட் ஆகியவை முக்கியம். இவற்றிற்கு உதவுவதற்காக சாம்பியன்ஸ் பவுண்டேசன் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. வெற்றி பெறுப வர்களுக்கு உடனடியாக ஊக்கத் தொகை, 3 விழுக்காடு இடஒதுக் கீட்டில் அரசு வேலை வழங்கப்படுகி றது. இதுவரை எந்த அரசும் செய் யாத அளவிற்கு கடந்த ஆண்டு 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்க ளில் வேலை வாய்ப்பு கொடுக்கப் பட்டுள்ளது. ஆண்டுதோறும் முத லமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தி வருகிறோம். ஆகவே நம்பிக்கையுடன் விளை யாட்டில் கவனம் செலுத்துங்கள். ஆடுகளத்தில் உங்களது வெற் றியை யாராலும் தடுக்க முடியாது, என்றார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநா தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தியூர் செல்வராஜ், கே.இ.பிர காஷ், முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, சட்டமன்ற உறுப் பினர்கள் வி.சி.சந்திரகுமார், ஏ.ஜி. வெங்கடாசலம், மேயர் சு.நாகரத்தி னம், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமை செய லாளர் அதுல்யா மிஸ்ரா, மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி, மாவட்ட வரு வாய் அலுவலர் சாந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில், மாநகராட்சி ஆணையர் அர் பித் ஜெயின் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.