அரசு மருத்துவமனைகளில் குறைவான செலவு : தமிழகத்திற்கு முதலிடம் தனியார் மருத்துவமனைகளில் அதிகச் செலவு
11 May 2026, 9:30 pm
<p><strong>அரசு மருத்துவமனைகளில் குறைவான செலவு : தமிழகத்திற்கு முதலிடம் தனியார் மருத்துவமனைகளில் அதிகச் செலவு</strong></p><p>சென்னை, மே 11- இந்தியாவிலேயே அரசு மருத்துவமனை களில் உள்நோயாளிகளாகச் சிகிச்சை பெறு வோருக்கான 'கைக்காசுச் செலவு' தமிழகத்தில் மிகக் குறைவாக இருப்ப தாகத் தேசிய மாதிரி கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. அரசு மருத்துவ மனைகளில் பிரசவம் தவிர்ந்த மற்ற சிகிச்சைகளுக்குத் தமிழகத்தில் சராசரியாக ரூ.1,357 மட்டுமே செலவாகிறது. இது தேசிய சராசரியான ரூ.6,631-ஐ விட மிகக் குறைவாகும். அரசு மருத்துவமனைகளில் மருந்து கள் மற்றும் பெரும்பாலான சேவைகள் இலவசமாக வழங்கப்படுவதே இதற்குக் காரணம் என வல்லுநர்கள் தெரி விக்கின்றனர். இருப்பினும், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான செலவு தமிழகத்தில் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது. தனியார் மருத்துவ மனைகளில் ஒரு நோயாளிக்குச் சராசரி யாக ரூ.74,168 செலவாகிறது; இது தேசிய சராசரியான ரூ.50,508-ஐ விட மிக அதிகம். மருத்துவப் பணவீக்கம் மற்றும் காப்பீட்டுத் திட்டங்கள் தனியார் மருத்துவமனைகளில் முழுமையாகப் பலன் தராததே இதற்குச் சான்றாகக் கூறப்படுகிறது. முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைவரும் விடுபடாமல் சிகிச்சை பெறுவதை உறுதி செய்வதன் மூலம் இச்செலவைக் குறைக்க முடியும் எனச் சுகாதாரத் துறை நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.</p>
