மே 21 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
15 May 2026, 10:20 pm
<p><strong>மே 21 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு </strong></p><p>சென்னை: தென் மேற்கு பருவமழை வழக்கத்திற்கு மாறாக ஐந்து நாட்கள் முன்ன தாகவே தெற்கு வங்கக் கடல் மற்றும் அந்த மான் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத் தில் துவங்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறி வித்துள்ளது. சனிக்கிழமை (மே 16) விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். மே 17 அன்று திண்டுக் கல், தேனி, கோயம் புத்தூர், நீலகிரி மாவட் டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மே 18 முதல் 21 வரை தமி ழகம் முழுவதும் லேசான முதல் மிதமான மழை தொடரும் என்று அறி விக்க ப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்ச ரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. வங்கக்கடல், அந்தமான் கடல் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மே 15 முதல் 18 வரை மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள தால் மீனவர்கள் கடலுக் குச் செல்வதை தவிர்க்கு மாறு அறிவுறுத்தப்படு கின்றனர்.</p>
