முந்தய பக்கம்

ஜூன் 12 வரை மழைக்கு வாய்ப்பு 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

6 Jun 2026, 10:58 pm
ஜூன் 12 வரை மழைக்கு வாய்ப்பு  14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
<p><strong>ஜூன் 12 வரை மழைக்கு வாய்ப்பு 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை</strong></p><p>சென்னை, ஜூன் 6 - வடக்கு கேரளம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 3.1 கிலோமீட்டர் உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால், தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் ஜூன் 7 முதல் ஜூன் 12 வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. கோயம்புத்தூர் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்றும், தென்காசி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 7 முதல் 10 வரை அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சி யஸ் வரை படிப்படியாகக் குறையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை யாக, ஜூன் 6 முதல் 10 வரை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளை குடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று குறிப்பிட்டு, அந்நாட்களில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram