தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துக!

3 Oct 2026, 10:30 pm
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துக!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துக!

மதுரை, அக். 3 –தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிப்பணியாளர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவப் பேரவை மதுரை மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவது, காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இம்மாநாட்டில், மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான பிரதிநிதிகள் கலந்துகொண்டு எழுச்சியுடன் குரல் எழுப்பினர்.

காலிப் பணியிடங்களை உடனே நிரப்புக!

பேரவைக்கு மாநிலத் தலைவர் ஆ. செல்வம் தலைமை தாங்கி கொடியேற்றினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், மதுரை மாவட்டத் தலைவர் இரா.

சிவக்குமார் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். வரவேற்புக்குழுத் தலைவர் க. நீதிராஜா வரவேற்றுப்பேசினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் என். ஜெயச்சந்திரன் தொடக்கவுரையாற்றினார்.

இடதுசாரி இயக்கம் எப்போதும் உறுதுணையாக நிற்கும்!

இப்பேரவையில் கலந்துகொண்டு உரையாற்றிய திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் வெறும் துறை சார்ந்தவை மட்டுமல்ல என்றும், அவை சமூகத்தின் கோரிக்கைகள் என்றும் குறிப்பிட்டார். ஜனநாயக உரிமைகளையும் பொதுத்துறை நிறுவனங்களையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். மேலும், தேர்தல் அறிக்கையில் வாக்களித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதுமற்றும் காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட உழைக்கும் மக்களின் கோரிக்கைகளுக்காக இடதுசாரி இயக்கம் தொடர்ந்து உறுதுணையாக நிற்கும் என அவர் உறுதியளித்தார்.

கருணை பணி நியமனங்களை விரைந்து நிறைவேற்றுக!

தொடர்ந்து உரையாற்றிய பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்வசுவாமி, தமிழகத்தின் சமூக, பொருளாதார மற்றும் விவசாய வளர்ச்சியில் பொதுப்பணித்துறையின் பங்கு மிக முக்கியமானதுஎன்று பாராட்டினார். பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்என்பது உள்ளிட்ட ஊழியர்களின் கோரிக்கைகளைச் சட்டமன்றத்தில் தொடர்ந்து வலுவாகக் குரல் கொடுத்து பெற்றுத் தருவோம் எனத் தெரிவித்தார். நிறைவுரையாற்றிய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு. பாஸ்கரன், அரசு ஊழியர்களின் உரிமைகளை வென்றெடுக்கத் துறைவாரிசங்கங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நிர்வாகிகள் தேர்வு

இதனைத் தொடர்ந்து சங்கத்தின் பொதுச்செயலாளர் கோ. கோமதிநாயகம் தனது வேலை, அமைப்பு மற்றும் வரவு–செலவு அறிக்கைகளைச் சமர்ப்பித்து முன்வைத்தார். மாநிலத் துணைத்தலைவர்கள் எஸ்.எம். வேலுமணி, கு.ரெங்கப்பன், மாநிலச் செயலாளர்கள் இரா. வெங்கடாஜலபதி, ஏ. சின்னப்பா செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும், வரவேற்புக்குழுச் செயலாளர் இரா. இராஜா உள்ளிட்டோரும் நிகழ்வை வழிநடத்தினர்.இப்பேரவையின் முடிவில் சங்கத்தின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநிலத் தலைவராக இராம. வெங்கடாஜலபதி, மாநிலப் பொதுச் செயலாளராகஹ. அப்துல் நஜுமுதீன், பொருளாளராக இரா. ராஜா உள்ளிட்ட 13 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழு முறைப்படித் தேர்வு செய்யப்பட்டது. நீண்டகாலமாகச் சேவை செய்த முன்னாள் மாநில நிர்வாகிகளுக்கு இந்நிகழ்வில் பாராட்டுத்தெரிவிக்கப்பட்டது.

தீர்மானங்கள்

இம்மாநிலப் பிரதிநிதித்துவப் பேரவையின் நிறைவாகப்பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 18 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக முழுமையாகஅமல்படுத்த வேண்டும்.நெடுஞ்சாலைத் துறையைப் போன்று கோட்டக் கணக்காளர் பணியிடங்களை மாநில சேவைப்பணியிடங்களாகத் தரமுயர்த்தி மாற்ற வேண்டும்.கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான 5 சதவீத வரம்பை முழுமையாக நீக்கி, ஏற்கனவே நடைமுறையில் இருந்த 25 சதவீத அளவை மீண்டும் வழங்க வேண்டும்.நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்புவதோடு, அனைத்துப் பணியிடங்களுக்கும் கலந்தாய்வு முறையில் மாறுதல் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.