தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு, புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

26 May 2026, 10:19 pm
மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு, புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
<p><strong>மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு, புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு</strong></p><p>மதுரை, மே 26: மதுரை குற்றவியல் நீதி மன்ற நடுவர் எண் 5 வழங்கிய தீர்ப்பை கண்டித்து, மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் வழக்கறிஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதி மன்றப் பணிகளை புறக்க ணித்தனர். மதுரை வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர் ஒருவரின் நியாயமான கோரிக்கையை முன்வைத்து நீதிமன்றத்தில் முறையீடு செய்த விவகா ரத்தில் ஏற்பட்ட பிரச்சனை யைத் தொடர்ந்து, சங்கத்தின் தலைவர், செயலாளர் உள் ளிட்ட நான்கு வழக்கறிஞர் கள் மீது நீதிமன்ற அவ மதிப்பு வழக்கு பதிவு செய் யப்பட்டு தண்டனை வழங் கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கை, வழக்கறிஞர்களின் நியாய மான, நேர்மையான, சுதந்திர மான மற்றும் நீதி பரிபாலனச் செயல்பாடுகளை பாதிக்கும் வகையில் உள்ளதாக வழக்க றிஞர்கள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட் டது. இதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட வழக்கறி ஞர்கள் சங்கம் சார்பில் கடந்த இரண்டு நாட்களாக நீதி மன்றப் பணிகளை புறக்க ணித்து உள்ளிருப்பு போராட் டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக, தமிழ்நாடு மற் றும் புதுச்சேரி வழக்கறிஞர் கள் சங்கங்களின் கூட்டுக் குழு (ஜாக்) தார்மீக ஆத ரவை அறிவித்தது. மேலும், மாநிலம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் செவ் வாய்க்கிழமை நீதிமன்றப் பணிகளில் இருந்து விலகி இருந்து, மதுரை மாவட்ட வழக்கறிஞர்களின் போராட் டத்திற்கு ஆதரவு தெரி விக்க வேண்டும் எனவும் ஜாக் அமைப்பு கேட்டுக் கொண்டது. அதன்படி, மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை உள்ளி ருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். இதில் சங்க நிர்வாகி கள் என்.முத்து அமுதநாதன், பி.ஜெயக்குமார், ஆர்.சவுரி ராமன், பி.எம்.சுரேஷ்குமார், எஸ்.பாலகிருஷ்ணன் உள் ளிட்ட ஏராளமான வழக்கறி ஞர்கள் கலந்து கொண்ட னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.