நீட் கொடுமைக்கு எதிராக கொந்தளிக்கும் தமிழ்நாடு!
23 Jul 2026, 11:38 pm

நீட் கொடுமைக்கு எதிராக கொந்தளிக்கும் தமிழ்நாடு!

தருமபுரி, ஜூலை 23- நீட் எனும் மரணப் பொறிக்கு எதி ராக நாடு முழுவதும் இந்திய இளை ஞர்கள் வீதிக்கு வந்து கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.

நீட் தேர்வை உடனடியாக ரத்து செய், முறைகேடு களின் மொத்த உருவமான தேசிய தேர்வு முகமையை கலைத்திடு, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்கிற குரல் நாடு முழுவதும் எதிரொ லித்து கொண்டிருக்கிறது.

இந்த நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இனைந்து மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்களை வீரியத்துடன் முன் னெடுத்து வருகின்றனர்.

தில்லியில் அறவழியில் போராடிய மாணவர்கள் மீது துணை ராணுவத்தி னரும் காவல் துறையும் அரங்கேற்றிய கொடூரத் தாக்குதலை கண்டித்து தமி ழகத்தில் வெடித்துள்ள இப்போராட்டங் களை, மாநில காவல் துறையும் தனது பங்கிற்கு அடக்குமுறையை கொண்டு ஒடுக்கப் பார்க்கிறது. காவல்துறையின் பூட்ஸ் கால்களுக்கும், லத்தி அடி யின் வலிக்கும் அஞ்சாமல், நீட் தேர்வி னால் பறிபோன பல நூறு ஏழை எளிய மாணவர்களின் கனவுகளுக்கு நீதி கோரி, தமிழகத்தின் ஒவ்வொரு மாவட் டத்திலும் மாணவர்கள் போராட்டக் களத்தை நோக்கி அணிதிரண்டு வருகி றார்கள்.

அடக்குமுறைகள், கைதுகள் தொடர்ந்தாலும், தொடர்ந்து வீரியமிக்க போராட்டங்களை மாணவர்கள் கையி லெடுத்துள்ளனர்.

அதன்ஒருபகுதியாக, தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு வியா ழனன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, மாணவர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் கவிநிலவன் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஸ்டாலின், அரசு பொறியி யல் கல்லூரி மாணவர் சங்க ஒருங்கி ணைப்புக்குழு துணைச் செயலாளர் வைரவளவன், ஒருங்கிணைப்புக்குழு கன்வீனர் செழியன், வாலிபர் சங்க மாவட் டத் தலைவர் ம.குறளரசன், பொருளா ளர் எம்.அருள்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நீலகிரி நீலகிரி மாவட்டம், கோத்தகிரி தாலுகா பகுதியில் சிஐடியு, வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் சார்பில் வியாழ னன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். அப் போது, கல்வி அமைச்சர் தர்மேந்தர பிர தானின் உருவ புகைப்படத்தை எரித்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதில், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் குமரன், தலைவர் யோகராஜ், சிஐடியு மாவட்டப் பொறுப்பாளர் மகேஷ், மண் டல துணைத்தலைவர் சாமிநாதன், மக் கள் அதிகாரம் அமைப்பின் மாநிலக் குழு உறுப்பினர் ஆனந்தராஜ், விசிக மண்டல துணைச்செயலாளர் மன்னர சன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் 2 ஆவது நாளாக காத்திருக்கும் போராட்டத்திற்கு திட்ட மிட்டது

அதன்படி, வாலிபர் சங்க மாவட் டச் செயலாளர் வி.ஏ.விஸ்வநாதன் தலைமையில், பெருந்துறை சாலையி லிருந்து கொங்கு மண்டபம் நோக்கி அமைதியாக நடந்து சென்றவர்களை தியாகி குமரன் சிலை அருகில் காவலர் கள் தடுத்து நிறுத்தினர்.

இதனால் போராட்டக்குழுவினர் சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். போராட்டக்காரர்களை குண்டு கட்டாக தூக்கி காவல்துறை வாகனத் தில் ஏற்றினர். இதில் இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் நவீன், வாலி பர் சங்க தாலுகா செயலாளர் கோபால் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிசாமி, ஈரோடு தாலுகா செயலாளர் என்.பால சுப்பிரமணி ஆகியோர் மருத்துவம னைக்கு சென்று, பாதிக்கப்பட்டவர்களி டம் நலம் விசாரித்தனர்.

மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஈரோட்டில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வட்டக்கிளை தலைவர் பா.அண்ணாதுரை தலைமையில் நடை பெற்ற போராட்டத்தில், மாவட்டத் தலை வர் எஸ்.ரமேஷ், செயலளார் ச.விஜய மனோகரன், பொருளாளர் ஆர்.சுமதி, வட்டக்கிளை செயலாளர் எம்.சந்திர மௌலி ஆகியோர் கண்டன உரையாற் றினர். தொழிற்பயிற்சி அலுவலர் சங்க மாநிலத் தலைவர் மு.சீனிவாசன் நிறை வுரையாற்றினார்.

இதேபோன்று, நம்பி யூரில் தாலுகா தலைவர் ராமலிங்கம் தலைமையிலும், பெருந்துறை, சத்தி மற்றும் கோபியில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கோவை கோவை, காந்திபுரத்தில் மாணவர், வாலிபர், மாதர் சங்கத்தினர் பங்கேற்ற பெருந்திரள் பேரணி நடைபெற்றது.

இதில் மாதர் சங்க மாவட்டத் தலைவர் உஷா, வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர் தினேஷ் ராஜா, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அகமது ஜூல்பி கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அன்னூர் கைகாட்டி பகுதியில் புத னன்று மாலை வாலிபர் சங்கத்தினர் கருப்புத்துணி கட்டிக்கொண்டு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் அர்ஜூன் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் மணிகண் டன், வாலிபர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் வியாழனன்று நடைபெற்ற மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அகமது ஜூல்பிகர் தலைமையில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தபால் நிலையம் முன்பு, மாணவர் சங்க மாவட்ட துணைத்தலைவர் யாழினி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில், மாவட்டச் செயலாளர் தங்க ராஜ், துணைச்செயலாளர் முஜிப் ரகு மான், மாவட்டக்குழு உறுப்பினர் அனுஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் வாலிபர், மாணவர் சமூக போரா ளிகளுக்கு ஆதரவளித்து, இந்திய தொழிற்சங்க மையத்தின் சேலம் மாவட் டக்குழு சார்பில், பால் மார்க்கெட் ரயில்வே கூட்செட் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந்தன் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவர் டி.உதயகுமார், மாவட்டப் பொருளாளர் இளங்கோ, துணைத்தலைவர் ஆர்.வெங்கடாபதி, நிர்வாகிகள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சி. உதயகுமார் உட்பட திரளான தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர்.