தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழகம் முழுவதும் சிறைகளில் பாதுகாப்புத் தணிக்கை குறைபாடுகள் உடனுக்குடன் சரிசெய்யப்படும்

31 Oct 2026, 11:17 pm
தமிழகம் முழுவதும் சிறைகளில் பாதுகாப்புத் தணிக்கை குறைபாடுகள் உடனுக்குடன் சரிசெய்யப்படும்

தமிழகம் முழுவதும் சிறைகளில் பாதுகாப்புத் தணிக்கை குறைபாடுகள் உடனுக்குடன் சரிசெய்யப்படும்

தேனி, அக்.31-தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துச் சிறைகளிலும் மீண்டும் பாதுகாப்புத் தணிக்கை நடத்தப்பட்டு, கண்டறியப்படும் குறைபாடுகள் உடனுக்குடன் சரிசெய்யப்படும். சிறைகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் 100 சதவீதம் பின்பற்றப்பட வேண் டும் என சிறைத்துறை ஏடிஜிபி சங்கர் தெரிவித்தார்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள மாவட்டச் சிறையில் கடந்த அக்.26 ஆம் தேதி இரவு காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடினர். அவர்களை 36 மணி நேரத்திற்குள் போலீசார் பிடித்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்ட அவர்கள், 15 நாள் நீதிமன்றக் காவலில் சேலம், பாளையங்கோட்டை, கோவை,கடலூர் சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாகப் பணியில் இருந்த தலைமைக் காவலர்கள், இரண் டாம் நிலைக் காவலர்கள் உள்பட 9 பேர் பணியிடை நீக் கம் செய்யப்பட்டனர். மாவட்டச் சிறையின் பொறுப்பு கண்காணிப்பாளராக இருந்த துணைக் கண்காணிப்பாளர் நாகேஸ்வரனும் பணியிடை நீக்கம் செய்யப் பட்டார். இதையடுத்து சிறைத்துறை ஏடிஜிபியாக சங்கர்நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், தேனி மாவட்டச் சிறையில் ஏடிஜிபி சங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பாதுகாப்பு நடைமுறைகள், காவலர் களின் எண்ணிக்கை மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர் களிடம் அவர் கூறுகையில், தேனி மாவட்டச் சிறையில் விரிவான பாதுகாப் புத் தணிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளிலும் மீண்டும் தணிக்கை நடத்தப்படும். ஆய் வில் கண்டறியப்படும் குறைபாடுகள் உடனடியாகச் சரிசெய்யப்படும். சிறைகளுக் கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. சிறைகளின் கொள்ளளவைவிடக் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், அவர்கள் மற்ற சிறைகளுக்கு மாற்றப்பட்டு முறைப்படுத்தப்படுவார் கள். கோவை சிறையிலிருந்து கைதிகள் யாரும் தப்பிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.