தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

3 மாவட்ட மத்திய சிறைகளின் சிறைத் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்

1 Nov 2026, 9:19 pm
3 மாவட்ட மத்திய சிறைகளின் சிறைத் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்

3 மாவட்ட மத்திய சிறைகளின் சிறைத் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு சிறைத்துறை அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து சிறைத்துறை டிஜிபி சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த அக்.26 ஆம் தேதி தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற விவகாரம் தமிழ்நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. எனினும், தப்பியோடிய 17 கைதிகளையும் காவல் துறையினர் பிடித்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.

இந்த சூழலில் சிறைத் துறையில் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக கடலூர், மதுரை, சேலம் ஆகிய மத்திய சிறைகளின் சிறைத் துறை கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து சிறைத் துறை டிஜிபி சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, “கடலூர் மத்திய சிறையின் கண்காணிப்பாளராக இருந்த பரசுராமன், மதுரை மத்திய சிறையின் கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மத்திய சிறையின் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய கிருஷ்ணராஜ், சேலம் மத்திய சிறையின் கண்காணிப்பாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மத்திய சிறையின் கூடுதல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய வினோத், கடலூர் மத்திய சிறையின் கூடுதல் கண்காணிப்பாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த பணியிட மாற்றங்கள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருகிறது. அதிகாரிகள் உடனடியாகப் பொறுப்பேற்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.