விலைவாசி உயர்வுக்கு எதிராக சிபிஎம் ஆவேசம்
4 Nov 2026, 12:29 am

விலைவாசி உயர்வுக்கு எதிராக சிபிஎம் ஆவேசம்

கோவை, நவ.3–விண்ணை முட்டும் விலைவாசி உயர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்கவேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும். ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை தடையின்றி வழங்கவேண்டும்.மின்சார கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் எழுச்சிகமான ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அறைகூவல் விடுத்திருந்தது.

இதனையேற்று விலைவாசி உயர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, கோவை கிழக்கு நகரக் குழுவிட்குட்பட்ட காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் என்.ஜாகீர் தலைமை ஏற்றார். இதில், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா, நகரக்குழு செயலாளர் ஏன்.சுபாஷ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். சிங்காநல்லூர் சுங்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகரக்குழு செயலாளர் ஆர்.மூர்த்திதலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.மனோகரன், வி.தெய்வேந்திரன், வி.சுரேஷ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். பீளமேடு நகரக்குழுவிற்குட்பட்ட ஆவாரம்பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகரக்குழு உறுப்பினர் ஜோதிபாசு தலைமை ஏற்றார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.அஜய்குமார், நகரக்குழு செயலாளர் ஏ.மேநாதன், மாமன்ற உறுப்பினர்கள் பூபதி, கண்ணகி ஜோதிபாசு உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். தொண்டாமுத்தூர் ஒன்றியக்குழுவிற்குட்பட்ட பச்சாபாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, இடைக் குழு உறுப்பினர் நஞ்சப்பன் தலைமை தாங்கினார்.

இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.ஆறுச்சாமி, ஒன்றியக்குழு செயலாளர் வி.மணி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். கோவை தெற்கு நகரக்குழுவிற்குட்பட்ட சுந்தராபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, இடைக்ஏற்றார். தெற்கு நகரக்குழு செயலாளர் கே.ஆர்.ரவி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். அன்னூர் ஒன்றியக்குழுவிற்குட்பட்ட பயணியர் மாளிகை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றியக்குழு செயலாளர் மணிகண்டன் தலைமை ஏற்றார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

மேட்டுப்பாளையம் தாலுகா குழுவிற்குட்பட்ட மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே நடை

பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா குழு உறுப்பினர் வீரபத்திர சாமி தலைமைஏற்றார். இதில், தாலுகா செயலாளர் கனகராஜ், மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ராஜலட்சுமி, காரமடை நகர மன்ற உறுப்பினர் ஆர் பிரியா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். ஆனைமலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா குழு உறுப்பினர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ஆர்.பழனிச்சாமி, தாலுகா செயலாளர் எம்.கனகராஜ், விதொச மாவட்டத் தலைவர் ஏ.துரைசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியக் குழு சார்பில் துடியலூர் பேருந்து நிறுத்தம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டக் குழு உறுப்பினர் ந.ராஜா தலைமை ஏற்றார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.அஜய் குமார், ஒன்றியச்செயலா

ளர் எம்.கோகுலகிருஷ்ணன், இன்ஜினயரிங் சங்க பொதுச்செயலாளர் சி.துரைசாமி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் ந.சிவராஜன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

திருப்பூர்

திருப்பூர் தீரன் சின்னமலை பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநகர முதலாவது மேற்கு மண்டலச்செயலாளர் ச.நந்தகோபால் தலைமை ஏற்றார். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், ஊத்துக்குளி தாலுகா குழு செயலாளர் கு.சரஸ்வதி ஆகியோர் உரையாற்றினர். மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், தௌ.சம்சீர் அகமது, மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, நகர செயலாளர் தண்டபாணி தலைமைஏற்றார். இதில், மாவட்டச் செயலாளர் மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மதுசூதனன், கனகராஜ், ஒன்றியச் செயலாளர்கள் சசிகலா, ஜெகதீசன், மடத்துக்குளம் தாலுகா செயலாளர் வடிவேல் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

தருமபுரி

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ஏ.ஜெயா தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயற்குழுஉறுப்பினர் சி.நாகராசன், ஒன்றியச் செயலாளர் கே.கோவிந்தசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச்செயலாளர் பி.குமார் தலைமை வந்தார்.இதில், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல, மொரப்பூரில் ஒன்றியச் செயலாளர் கே.தங்கராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் இரா.சிசுபாலன் பங்கேற்று உரையாற்றினார். பாப்பிரெட்டிப்பட்டியில் வட்ட செயலாளர் தி.வ.தனுசன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மல்லிகா உள்ளிட்டோரும், நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச்செயலாளர் எஸ்.எஸ்.சின்னராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சோ.அருச்சுணன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். பாலக்கோட்டில் வட்ட செயலாளர்பி.காரல்மார்க்ஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்துவும், பாப்பாரப்பட்டியில் பகுதி செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விசுவநாதன், இண்டூரில் பகுதிக்குழு செயலாளர் சேகர்தலைமை வகித்தார். பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச்செயலாளர் ஆ.ஜிவானந்தம் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தி.வ.தனுசன் உள்ளிட்டோர் உரையாற்றினர். மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.

சேலம்

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேச்சேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் ஜி.மணிமுத்து தலைமை ஏற்றார். ஓமலூர் பஸ் நிலையம் அண்ணா சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் கே. சேகர் தலைமை ஏற்றார். கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.ராமமூர்த்தி, பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் அரியா கவுண்டர் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு விற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய குழு உறுப்பினர் பி.கார்த்தி தலைமை ஏற்றார். இதில், பொறுப்புச் செயலாளர் கே. குமார்உள்ளிட்டோர்பங்கேற்றனர். ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் நேரு தலைமை ஏற்றார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.எம். தேவி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். வாழப்பாடி தாலுகா குழுவிற்குட்பட்ட அயோத்தியா பட்டணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தாலுகா செயலாளர் ஜி பூபதி தலைமை ஏற்றார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கனகராஜ் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர். எடப்பாடி தாலுக்காகுழு மற்றும் கொங்கணாபுரம் ஒன்றிய குழு சார்பில் கொங்கணாபுரம் சந்தைப்பேட்டை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எடப்பாடி தாலுகா செயலாளர் கே.நடராஜ், கொங்கணாபுரம் ஒன்றிய செயலாளர் எஸ்.முத்துசாமி ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.கணபதி உள்ளிட்ட திரளானோர்கேற்றனர். நங்கவள்ளி ஒன்றிய குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஜலகண்டாபுரம் பேருந்து நிலையத்தில்நடைபெற்றது. ஒன்றிய குழு செயலாளர் கிருஷ்ணவேணி தலைமை ஏற்றார். சங்ககிரி பேருந்து நிலையம் முன்பு சங்ககிரி தாலுகா செயலாளர் ஏ.ஆறுமுகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே ராஜாத்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சேலம் தாலுக்கா குழு சார்பில் எஸ் கொல்லப்பட்டி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் ஏ. சுந்தரம் தலைமை தாங்கினார் இதில் சேலம் தாலுகா குழு உறுப்பினர்கள் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.