ஆன்லைன் மோசடி புகார்களுக்கு ‘இ-ஜீரோ எஃப்ஐஆர்’ முறை அறிமுகம்!
19 Jul 2026, 9:31 pm

ஆன்லைன் மோசடி புகார்களுக்கு ‘இ-ஜீரோ எஃப்ஐஆர்’ முறை அறிமுகம்!

காவல்துறை புதிய திட்டம் சென்னை, ஜூலை 19 - ஆன்-லைன் நிதி மோசடி புகார்களுக்கு ‘இ-ஜீரோ எஃப்ஐஆர்’ முறையை தமிழக காவல்துறை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் ஆன்-லைன் மோசடியில் இழந்த பணத்தை விரைவாக மீட்கும் வாய்ப்பு அதிகமாகும் என தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.

சமீப காலமாக பகுதி நேர வேலை மோசடி, டிஜிட்டல் கைது மோசடி, போலிக் கடன் செயலி, யுபிஐ மற்றும் வங்கி கேஒய்சி மோசடி என பல்வேறு வடிவங்களில் சைபர் குற்றங்கள் அதி கரித்து வருகின்றன. இந்நிலையில், ஆன்-லைன் நிதி மோசடி புகார்களை விரைவாக பதிவு செய்து, இழந்த பணத்தை மீட்கும் நடவடிக்கைகளை வலுப் படுத்த, தமிழக காவல்துறை, ‘இ-ஜீரோ எஃப்ஐஆர்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, 1930 என்ற உதவி எண்ணுடன் இந்த புதிய வசதி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஆன்-லைன் மோசடியில் பணத்தை இழந்தவர்கள் உடனடியாக 1930 என்ற சைபர் க்ரைம் உதவி எண்ணை அழைத்து புகார் தெரிவிக்க வேண்டும்.

ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான நிதி மோசடி புகார்கள், குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு வலையமைப்புடன் தானாகவே ஒருங்கிணைக்கப்பட்டு ‘இ-ஜீரோ எஃப்ஐஆர்’-ஆக பதிவு செய்யப்படும். பின்னர், புகார் அளித்தவருக்கு, ‘இ-ஜீரோ எஃப்ஐஆர்’ பதிவு செய்யப்பட்ட விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். புதிய சட்ட விதிகளின்படி, புகார்தாரர் தனது புகாரை உறுதிப்படுத்த, குறிப்பிட்ட சைபர் குற்ற காவல் நிலையத்தில் 3 நாட்களுக்குள் நேரில் ஆஜ ராக வேண்டும். புகார்தாரர் நேரில் ஆஜராகி உறுதிப் படுத்தியதும், அந்த ‘இ-ஜீரோ எஃப்ஐஆர்’ சம்பந்தப்பட்ட அதிகார வரம்புடைய காவல் நிலையத் துக்கு மாற்றப்பட்டு, வழக்கமான எஃப்ஐஆர்-ஆக பதியப்படும்.

பிஎன்எஸ்எஸ், 2023 பிரிவு 173-ன் கீழ் இந்த முறை செயல்படுத்தப்படுகிறது. இது அதிகார வரம்பை பொருட்படுத்தாமல் புகார்களை பதிவு செய்ய வழிவகை செய்கிறது. இதனால் சட்ட நட வடிக்கைகள் தாமதமின்றி உடனடியாகத் தொடங்க முடிகிறது. இம்முறையினால் தகவல்கள் உடனுக்குடன் பரிமாறப்படுவதால், மோசடி செய்பவர்களின் வங்கிக் கணக்கை விரைவாக முடக்க முடியும். டிஜிட்டல் ஆதாரங்கள் உடனுக் குடன் பாதுகாக்கப்படுவதால், பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை மீட்டெடுக்கும் வாய்ப்பு அதி கரிக்கிறது. மேலும், ஒரே தகவலை பலமுறை பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை” என கூறப்பட்டுள்ளது.