தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீதிக்காகக் காத்திருக்கும் 18,518 குழந்தைகள் போக்சோ வழக்குகளில் தமிழகம் முதலிடம்; நீதிமன்றங்களில் நீளும் காத்திருப்பு

3 Nov 2026, 10:21 pm
நீதிக்காகக் காத்திருக்கும் 18,518 குழந்தைகள் போக்சோ வழக்குகளில் தமிழகம் முதலிடம்; நீதிமன்றங்களில் நீளும் காத்திருப்பு

நீதிக்காகக் காத்திருக்கும் 18,518 குழந்தைகள் போக்சோ வழக்குகளில் தமிழகம் முதலிடம்; நீதிமன்றங்களில் நீளும் காத்திருப்பு

சென்னை, நவ. 3 -தனக்கு நேர்ந்த கொடுமையை ஒரு குழந்தை வெளியே சொல்வதே பெரும் போராட்டம். அதைக் கடந்து

காவல் நிலையம் வரை வரும் குடும்பம், பிறகு நீதிமன்ற வாசலில் ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை தமிழகத்தில் நிலவுகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கலான அறிக்கைகளும், தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) புள்ளிவிவரங்களும் இந்தக் கசப்பான உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளன. குழந்தைகளைப் பாதுகாக்க 2012இல்கொண்டுவரப்பட்ட ‘போக்சோ சட்டம்’தன் நோக்கத்தை நிறைவேற்றுகிறதா என்ற கேள்வியை இந்தத் தரவுகள் எழுப்புகின்றன.

உயர் நீதிமன்றம் முன் வைக்கப்பட்ட கணக்கு

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான ஒருவர் தொடர்ந்த ரிட் மனுவை (W.P. 20751/2026) தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதிஜி. அருள்முருகன் அமர்வு விசாரித்து வருகிறது. மாவட்டவாரியாக நிலுவையில் உள்ள போக்சோ வழக்குகள், செயல்படும் நீதிமன்றங்கள், நீதிபதி நியமனம் தேவைப்படும் இடங்கள், உள்கட்டமைப்புத் தேவைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யமாநில அரசுக்கும் உயர் நீதிமன்றப் பதிவுத்துறைக்கும் ஜூன் 22 அன்று இந்த அமர்வு உத்தரவிட்டது.

அந்த அறிக்கையின்படி, தமிழகத்தில் 18,518 போக்சோ வழக்குகள் விசாரணை நிலுவையில் உள்ளன. இவற்றில் 10,202 வழக்குகள் ஓராண்டைத் தாண்டியும் முடியவில்லை. நிலுவையில் உள்ள 1,920 பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 76.7 சதவீதம், சட்டம் வரையறுத்த இரண்டுமாதக் காலக்கெடுவைத் தாண்டிவிட்டன. மாநிலத்தின் 20 மாவட்டங் களுக்குத் தனி போக்சோ நீதிமன்றமே அனுமதிக்கப்படவில்லை.

சட்டம் சொல்வதும் நடப்பதும்போக்சோ சட்டப் பிரிவு 35இன்படி,சிறப்பு நீதிமன்றம் வழக்கை எடுத்துக்கொண்ட 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவாக வேண்டும்; ஓராண்டுக்குள் விசாரணை முடிய வேண்டும். ஆனால் ஆய்வு செய்யப்பட்ட 18,870 வழக்குகளில் 3,170இல் (16.8%) மட்டுமே காலக்கெடுவுக்குள் சாட்சியம் பதிவாகியுள்ளது. ஆறில் ஐந்துகுழந்தைகள், சட்டம் உறுதியளித்த காலத்தைத் தாண்டியே சாட்சியம் பெறப்படுகின்றனர். 4,729 வழக்குகளில், காவல்துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்த பிறகும் நீதிமன்றம் இன்னும் விசாரணைக்கு எடுக்கவில்லை.

எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்

போக்சோ சட்டத்தின் கடுமையானபிரிவுகளான 4, 6இன் கீழ் (ஊடுருவல் பாலியல் தாக்குதல்) பதிவான வழக்குகளில், தேசிய குற்றப் பதிவு ஆவணக்காப்பகத்தின் (என்சிஆர்பி) ‘இந்தியாவில் குற்றங்கள் 2024’ அறிக்கை தமிழகத்தை (5,320) நாட்டிலேயே முதலிடத்தில் வைக்கிறது. மகாராஷ்டிரம் (4,829), மத்தியப் பிரதேசம் (3,721), உத்தரப் பிரதேசம் (3,671) அடுத்த இடங்களில் உள்ளன. நாடு முழுவதும் 2024இல்69,191 போக்சோ வழக்குகள் பதிவாகின; குழந்தைகளுக்கு எதிரான மொத்தக் குற்றங்கள் 2020ஐவிட 46 சதவீதம் அதிகரித்து1,87,702 ஆகியுள்ளன.

தமிழகத்தில் போக்சோ வழக்கு

கள் 2022இல் 4,968, 2023இல் 4,581, 2024இல் 6,969 எனப் பதிவாகியுள் ளன; ஒரே ஆண்டில் 52.1 சதவீத உயர்வு. இது குற்றங்கள் திடீரென அதிகரித்ததைவிட, முன்பு மறைக்கப்பட்ட வழக்குகள் புகாராக வருவதைக் காட்டுகிறது என்கின்றனர் அதிகாரிகளும் குழந்தை உரிமைச் செயல்பாட்டாளர்களும். அது உண்மை யெனில், புகார் அளிக்க முன்வரும் குடும்பங்களுக்கு விரைவான நீதிகிடைக்காதது அந்த நம்பிக்கை யையே சிதைத்துவிடும்.

‘வீட்டுக்குள்ளேயே’ ஆபத்து

அறிமுகமானவர். 44,126 வழக்குகளில் 3,658இல் குடும்ப உறுப்பினர்களே குற்றவாளிகள்; 16,668இல் குடும்ப நண்பர்கள், அண்டை வீட்டார், பணியமர்த்து வோர் உள்ளிட்டோர். குடும்பத்துக்கு ள்ளேயே இருக்கும் குற்றவாளிக்கு எதிராகச் சாட்சியம் அளிக்க வேண்டியகுழந்தை, வழக்கு நீள நீள அழுத்தங்களுக்கும் மிரட்டல்களுக்கும் உள்ளாகிறது. தாமதம் பல நேரங்களில் சாட்சிகள் பிறழ்வதற்கும் குற்றவாளிகள் விடுதலையாவதற்குமே வழிவகு க்கிறது. 2024இல் நாடு முழுவதும் முடிவடைந்த பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சுமார் 24 சதவீதத்தில் மட்டுமே தண்டனை கிடைத்தது; 68 சதவீதம் விடுதலையில் முடிந்தன. ஒரு ஆண்டில் பதிவான வழக்குகளில் அதே ஆண்டிலேயே தண்டனை கிடைத்தது 1.5 சதவீதத்துக்கும் குறைவு.

பெண்களும் காணாமல் போகும் குழந்தைகளும்

என்சிஆர்பி 2024 தரவுகளின்படி, தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வழக்குகள் 2023இல் 8,943 ஆக இருந்தது 11,363ஆக உயர்ந்துள்ளது. கணவர் அல்லது உறவினர்களின் கொடுமை 3,344, வரதட்சணைத் தடைச் சட்ட வழக்குகள் 2,042, வரதட்சணை மரணங்கள் 34, பெண்கள் கடத்தல்1,911, பின்தொடர்ந்து துன்புறுத்தல் 521 என வழக்குகள் பதிவாகியுள்ளன.

2024இல் தமிழகத்தில் 8,032 குழந்தைகள் காணாமல் போனதாக என்சிஆர்பி பதிவு செய்துள்ளது. நாடு முழுவதும் 98,375 குழந்தைகள்; அவர்களில் 76.9 சதவீதம் சிறுமிகள்; 48,349 பேர் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 24 வரையிலான ஒரே மாதத்தில், ராணிப்பேட்டை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் குறைந்தது 10 குழந்தைகள் காணாமல் போனதாகச் செய்திகள் வெளியாகின; நால்வர் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர்; சிலர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. காணாமல் போகும்அனைத்து சம்பவங்களும் கடத்தல் அல்ல; ஆனால் கடத்தல், சட்டவிரோதத் தத்தெடுப்பு, மருத்துவமனைகளில் குழந்தைத்திருட்டு ஆகியவற்றுக்கு நீண்ட வரலாறு உண்டு என்று குழந்தை உரிமைச் செயல்பாட்டா ளர்கள் எச்சரிக்கின்றனர். சமூகக் காவல் முறை பலவீனமடைந்ததையும், தொழில்நுட்ப வசதிகள் முறையாகப் பயன்படுத்தப்படா ததையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதிகாரப்பூர்வ எண்ணிக்கையைவிட உண்மை நிலை பல மடங்கு அதிகமாக இருக்கலாம்.

2025 ஜனவரி–ஜூலையில் 9,813 ஆக இருந்த போக்சோ வழக்குகள் 2026இன் அதே காலத்தில் 6,491 ஆகக் குறைந்துள்ளதாகக் காவல்துறைத் தரவுகள் கூறுகின்றன. ஆனால், புதிய அரசு பொறுப்பேற்ற ஐந்து மாதங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக மாதர் அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன. குறைந்தது குற்றமா, புகார் பதிவா என்பதைச் சுயேச்சை யான ஆய்வே தீர்மானிக்க முடியும். எப்படியிருப்பினும், ஏற்கெனவேகுவிந்துள்ள 18,518 வழக்குகளின் சுமை குறையவில்லை.

தாமதத்தின் வேர்கள்

தடயவியல் ஆய்வுகள், டி.என்.ஏ. அறிக்கைகள் மாதக்கணக்கில் தாமதமாவது முதன்மைக் காரணம். குழந்தையின் வாக்கு

மூலத்தைப் பதிவு செய்ய நீதித்துறை நடுவர் முன் தேதி கிடைப்பதில் சிக்கல், காலியான நீதிபதிபணியிடங்கள், போதுமான சிறப்பு நீதிமன்றங்கள் இல்லாமை, காவல்துறை–நீதிமன்றத் தகவல் பரிமாற்றக் குறைபாடு ஆகியவற்றையும் வழக்கறிஞர்கள் சுட்டுகின்றனர். ஒன்றிய அரசின் விரைவு சிறப்பு நீதிமன்றத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 14 நீதிமன்றங்கள் செயல்படுகின்றன; 2024 இறுதி வரை 8,898 போக்சோ வழக்குகளை முடித்துள்ளன. ஆனால் 2019-20 முதல் 2024-த்துக்கு தமிழகத்துக்கு ஒன்றிய அரசு வழங்கியது ரூ.25.4 கோடி மட்டுமே. நாடு முழுவதும் இந்த நீதிமன்றங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை,போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடலூர், திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி போக்சோ நீதிமன்றங்களின் காலிப்பணியிடங்களை நிரப்ப உயர் நீதிமன்றமே ஜூலையில் உத்தரவிட வேண்டியிருந்தது.

காகிதத்தில் மட்டும் பாதுகாப்பு அரண்கள்

சாட்சியத்துக்கு குழந்தையை மீண்டும் மீண்டும் அழைக்கக் கூடாது (பிரிவு 33); குற்றம் சாட்டப்பட்டவரைக் குழந்தை பார்க்க

நேரிடக் கூடாது (பிரிவு 36); விசாரணை ரகசியமாக நடக்க வேண்டும் (பிரிவு 37) என்று சட்டம் பல அரண்களைக் கொண்டுள்ளது. ஆனால் தனி போக்சோ நீதிமன்றமேஇல்லாத மாவட்டங்களில், நெரிசலான அமர்வு நீதிமன்ற வளாகங்களில் குற்றம் சாட்டப்பட்டவரும் குழந்தையும் ஒரே நடைபாதையில் சந்திக்கும் சூழல் உருவாகிறது. ஒவ்வொரு முறை நீதிமன்றத்துக்கு அழைக்கப்படும்போதும் குழந்தை தனக்குநேர்ந்த கொடுமையை மீண்டும் நினைவுகூர வேண்டியிருப்பது பல்வேறு மனநலப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் குழந்தைகள் மனநல நிபுணர் டாக்டர் ராணி சக்கரவர்த்தி கூறுகிறார். 2019 திருத்தம் மூலம் மரணதண்டனை வரை தண்டனைகள் கடுமையாக்கப்பட்டன. ஆனால் தண்டனையின் கடுமையை விட, அது உறுதியாகவும் விரைவாகவும் கிடைப்பதே குற்றங்களைத் தடுக்கும்என்று சட்ட வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

26 புதிய நீதிமன்றங்கள்: போதுமா?

இந்த நிலையில், ரூ.46.59 கோடி செலவில் 26 போக்சோ சிறப்பு நீதிமன்றங்களை (12 புதியவை, 14 கூடுதல்) அமைக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் மாநிலத்தின் 47 காவல் மாவட்டங்களுக்கு 52 போக்சோ நீதிமன்றங்கள் கிடைக்கும். இது வரவேற்கத்தக்கது. ஆனால் ஒரு நீதி மன்றத்துக்குச் சராசரியாக 350க்கும் மேற்பட்ட வழக்குகள் என்ற நிலை தொடர்ந்தால்,ஓராண்டுக் காலக்கெடு காகிதத்தில் மட்டுமே இருக்கும். நீதிபதிகள், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், பணியாளர்கள் உடனேநியமிக்கப்பட வேண்டும்; குழந்தைகளுக்கு உகந்த சாட்சியப் பதிவு அறைகள் அமைக்கப்பட வேண்டும்.

செய்ய வேண்டியவை

• வழக்கு விசாரணை ஒத்திவைப்புகளைத் தவிர்க்க முடியாத சூழல்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தி, ஒவ்வொன்றுக்கும் காரணம் பதிவு செய்ய வேண்டும் (உயர் நீதிமன்றம், ஜூலை 30).

• போக்சோ நீதிபதிகளுக்குக் குழந்தை மைய நடைமுறைகள் குறித்துப் பயிற்சி; மாவட்ட ந்தோறும் சாட்சிகளை உரிய நேரத்தில் ஆஜர்படுத்தச் சிறப்புப் பணிக்குழு.

• தடயவியல் ஆய்வகங்களின் திறனை உயர்த்தி, போக்சோ அறிக்கைகளுக்குக் கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும்.

• பாதிக்கப்பட்ட குழந்தையை ஒரே அமர்வில் விசாரிக்க வேண்டும்; மருத்துவ, மனநல உதவி, கல்வி உதவி, இடைக்காலஇழப்பீடு உடனடியாகக் கிடைக்க வேண்டும்.

• மாவட்டக் குழந்தைப் பாதுகாப்பு அலகுகளுக்கும் குழந்தைகள் நலக் குழுக் களுக்கும் போதுமான பணியாளர்களும் நிதியும் வேண்டும்.

• உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிகள், பெற்றோர்–ஆசிரியர் கழகங்கள், மாதர், வாலிபர் அமைப்புகளை இணைத்துச் சமூகக்கண்காணிப்பு வலைப்பின்னல் உருவாக்க வேண்டும்.

குழந்தைகளுக்கான நீதி தாமதமாகும் ஒவ்வொரு நாளும் குற்றவாளிகளுக்குக் கிடைக்கும் சலுகை நாள். 18,518 என்பது வெறும் எண் அல்ல; நீதிக்காகக் காத்திருக்கும் 18,518 குழந்தைகளும் அவர்களின் குடும்பங்களும். அவர்களுக்கான நீதியை உறுதிசெய்வது அரசு, நீதித்துறை, காவல்துறை, சமூகம் என அனைவரின் கூட்டுப் பொறுப்பு.

எண்ணிக்கையில் போக்சோ வழக்கு நிலுவை – தமிழ்நாடு விவரம் எண்ணிக்கை

விசாரணை நிலுவையில் உள்ள போக்சோ வழக்குகள் 18,518

ஓராண்டைத் தாண்டி நீளும் வழக்குகள் 10,202

30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவானவை 3,170 / 18,870 (16.8%)

இறுதி அறிக்கை தாக்கலாகியும் நீதிமன்றம் எடுக்காதவை 4,729

போக்சோ நீதிமன்றம் அனுமதிக்கப்படாத மாவட்டங்கள் 20

2024இல் பதிவான போக்சோ வழக்குகள் (மாநில அரசு) 6,969 (+52.1%)

2024இல் காணாமல் போன குழந்தைகள் (NCRB) 8,032

ஆதாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கலான அறிக்கை, தமிழக உள்துறைக் கொள்கைக் குறிப்பு 2025-26, NCRB 2024

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.