பிளஸ் 2 தேர்வு முடிவு மே 8-இல் வெளியாகுமா?
6 May 2026, 11:10 pm
<p><strong>பிளஸ் 2 தேர்வு முடிவு மே 8-இல் வெளியாகுமா?</strong></p><p>சென்னை, மே 6 - தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 20-இல் முடிக்கப்பட்டு, மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. முன்பு அறிவித்தபடி மே 8-இல் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.</p><p>எனினும் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தேர்வு முடிவுகளை வெளியிட புதிய அரசின் ஒப்புதல் பெற வேண்டும் என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். புதிய அரசு அமைந்ததும் உரிய ஒப்புதல் பெற்று முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதனால் தேர்வு முடிவு அறிவிப்பு தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.</p>
